முன்னாள் சிஜே தேச நிந்தனை புரிந்தாரா ? விசாரணை தேவை- இண்ட்ராப்

vedamurமுன்னாள்  தலைமை  நீதிபதி  அப்துல்  ஹமிட்  முகம்மட்  திங்கள்கிழமை  நோன்பு  திறக்கும்  நிகழ்வு  ஒன்றில்    ஆற்றிய  உரைக்காக  போலீசார்  அவரை  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  விசாரிக்க  வேண்டும்  என்கிறார்   மலேசிய  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி.

ஹமிட்டின்  பேச்சு  மலாய்க்காரர்களிடையே  சினத்தைத்  தூண்டும்  நோக்கம்  கொண்டது  என்றவர்  சொன்னார்.

“இன வெறுப்பைத்  தூண்டி  விடும்  பேச்சுக்காக  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  போலீஸ்  அவர்மீது  விசாரணை  நடத்த  வேண்டும். போலீசார்  சட்டத்தைச்  செயல்படுத்துவதில்  பாகுபாடு காண்பிக்கக்  கூடாது, அனைவரிடத்திலும்  ஒரே  மாதிரியாகவே  நடந்துகொள்ள  வேண்டும்.

“சிறுசிறு  காரணங்களுக்காக  அரசியல்வாதிகளையும்  சீர்திருத்த- எண்ணம்  கொண்ட  வழக்குரைஞர்களையும் சமூக  ஆர்வலர்களையும்  தேச  நிந்தனைச்  சட்டத்தின்கீழ்க்  குற்றம்சாட்டும்போது  இப்படிப்  பேசியும்  சீண்டியும்  விட்டுள்ள ஒருவரை  அதிலும்  முன்னாள்  தலைமை  நீதிபதியை  அவ்வளவு  எளிதாக விட்டுவிடக்  கூடாது”, என  வேதமூர்த்தி  கூறினார்.