பாஸ் இளைஞர்கள் காலிட் சிலாங்கூர் எம்பி-ஆக தொடர்வதை விரும்புகிறார்கள்

youthகாலிட்  இப்ராகிமே  சிலாங்கூர்  மந்திரி புசாராக  தொடர  வேண்டுமென்று  கூறும்  பாஸ்  இளைஞர்  பகுதி, அவரை  மாற்றுவதற்காகக்  கூறப்படும்  காரணம் “சரியானதல்ல”  என்கிறது.

பாஸ்  சிலாங்கூரைப்  போலவே  அதன்  இளைஞர்  பகுதியும்  காலிட்  தொடர்ந்து  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  இருப்பதையே  விரும்புகிறது  என  அதன்  தலைவர்  ஷியார்ஹான் ஹுமாய்சி  அப்துல்  ஹாலிம்  கூறினார்.

பிகேஆரின் நிலைத்தன்மைக்காக  அவரை  மாற்ற  வேண்டும்  என்று  கூறி  மக்கள்  பக்காத்தான்  ரக்யாட்  மீது  வைத்துள்ள நம்பிக்கையைக்  கெடுத்து  விடக்கூடாது  என்றாரவர்.