ஏவுகணை வைத்திருப்பதாகக் கூறவில்லை என்கிறார்கள் கிளர்ச்சிக்காரர்கள்

missileகிளர்ச்சிப்படையினர் ரஷ்யாவிடமிருந்து BUK ஏவுகணைகளைப்  பெற்றிருப்பதை  ஒப்புகொண்டதாக  வெளிவந்துள்ள  செய்தியை  உக்ரேன்  பிரிவினைவாத  படைகளின்  தலைவர்  அலெக்சாண்டர் கொடாகோவ்ஸ்கி  மறுக்கிறார்  என  த  கார்டியன்  அறிவித்துள்ளது.

ராய்ட்டர்  நேர்காணல்  ஒன்றில்,  அவர்  அவ்வாறு  கூறியதாக  சொல்லப்படுகிறது.  கொடாகோவ்ஸ்கி-க்கு நெருக்கமானவர்களும்  அச்செய்தியை  மறுத்துள்ளனர்.

எம்எச்-17 விழுந்து  நொறுங்கியதிலிருந்து  உக்ரேன் அரசாங்கமும்  அதன்  மேற்கத்திய  நட்பு  நாடுகளும்  ரஷ்யாவிடமிருந்து  பெற்ற  ஏவுகணைகளைக்  கொண்டு  கிளர்ச்சிப்படையினர்தாம்  அதைச்  சுட்டு  வீழ்த்தியதாகக்  கூறி  வருகின்றன.  கிளர்ச்சிப்படையினரும்  ரஷ்யாவும்  அதை மறுத்து  உக்ரேன்தான்  அதற்குக் காரணம்  என்று  கூறியுள்ளன.