ஏர் அல்கேரி விமானத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை

lostஏர் அல்கேரி நிறுவனம்,  பெர்கினா பாசோ-விலிருந்து  அல்ஜீரியா  சென்று  கொண்டிருந்த  அதன் விமானத்துடன் திடீரென்று தொடர்புகொள்ள  முடியாமல்  போனதாகக்  கூறப்படுகிறது.

“வாகாடூகூ-விலிருந்து  அல்ஜியர்ஸ்  சென்று  கொண்டிருந்த  ஏர்  அல்கேரி  விமானத்துடன், புறப்பட்ட  50  நிமிடங்களுக்குப்   தொடர்பு  அறுந்துபோனது”, என விமான  நிறுவனம்  கூறியதாக  ஏஎப்பியை  மேற்கோள்காட்டி  தேசிய  செய்தி  நிறுவனமான  ஏபிஎஸ் கூறிற்று.

அவ்விமானத்தில்  எத்தனை பேர் பயணித்தனர்  என்ற விவரம்  வெளியிடப்படவில்லை.