பிகேஆரின் முயற்சிகளுக்கு வேட்டு வைத்தது பாஸ்

hadiபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், தம்  ஆதரவு  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும்  சிலாங்கூரின்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமுக்குத்தான்  என்று  அறிவித்துள்ளார். இதன்  மூலம்  காலிட்டைப்  பதவியிலிருந்து  தூக்கும்  பிகேஆரின்  முயற்சிகளுக்கு  வேட்டு  வைத்திருக்கிறார்  எனலாம்.

காலிட்,  மக்கள்  அவர்மீது  வைத்த  நம்பிக்கைக்குத்  துரோகம்  இழைக்கவில்லை  என்று  ஹாடி  கூறியதாக  பெர்னாமா  அறிவித்தது.

“இதுதான்  என்  நிலை. பாஸ்  தலைவர்கள்  இதை ஆதரிப்பார்கள்  என்று  நம்புகிறேன்”, என்று  கூறியவர்  காலிட்  மந்திரி புசாராக  தொடர  வேண்டும்  என்பதுதான்  பாஸ்  உறுப்பினர்  பலரது  விருப்பமுமாகும்  என்றார்.