நிக் அசிஸ்: சிலாங்கூர் எம்பியை மாற்றவதற்கான காரணம் ஏதும் இல்லை

 

PAS- Nik aziz-MBபாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் தோக் குரு நிக் அசிஸ் நிக் மாட் அவரது கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு தெரிவித்திருந்த ஆதரவுக்கு மிகுந்த கவனமுடன் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

ரமதான் மற்றும் நோன்பு ஆகிய ஆன்மீக நடைமுறைகளில் கவனம் செலுத்துவதை தாம் விரும்புவதாகவும், ஆனால் சிலாங்கூர் மந்திரி புசார் பிரச்சனை குறித்த தமது நிலைப்பாடு என்ன என்ற முடிவற்ற கேள்விகளுக்கு” பதில் கூற வேண்டிய கட்டாயத்திற்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாக தோக் குரு கூறினார்.

சிலாங்கூர் மந்திரி புசார் காலிட்டை பாஸ் கட்சியின் தலைவர் அவரது அறிக்கையில் தற்காத்திருப்பது பற்றி ஊடகங்கள் தம்மிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாக அவர் கூறினார்.

“நான் தலைவரின் அறிக்கையை படித்திருக்கிறேன். நான் அவரை முழுமையாக ஆதரிக்கிறேன்.

“நான், நாட்டிலுள்ள பலரைப் போல், காலிட் என்ன தவறு செய்து விட்டார் அதற்காக அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கேட்கிறேன்?”, என்று நிக் அசிஸ் வினவினார்.

‘கேப்டன் தவறு செய்திருக்கலாம், ஆனால்’

காலிட் அவரது முதல் தவணையில் மிகச் சிறப்பாக சேவையாற்றியுள்ளார். அதன் விளைவாக சிலாங்கூரின் தனிச்சிறப்பு உயர்ந்துள்ளதுyouth என்று அவர் கூறினார்.

அவர் அப்படியே மறுக்க முடியாத தவறுகளைச் செய்திருந்தாலும், அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்பது தகைமையற்றதாகும் என்றாரவர்.

அவசரப்பட்டு ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு பக்கத்தான் தலைமைத்துவம் இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நிக் அசிஸ் வலியுறுத்தினார்.

கப்பலின் கேப்டன் சில சமயங்களில் தவறு செய்திருக்கலாம். அதற்காக கப்பலின் சிப்பந்திகளே கேப்டனாவதற்கு அவசரப்படக்கூடாது என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

hadi“தமது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு ஹாடி போதுமான தகவல்களைப் பெற்றிருப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்று கூறிய தோக் குரு அசிஸ், இப்போதைக்கு பாஸ் அதன் தலைவரின் அறிக்கைக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது போதுமானதாகும் என்று அவர் மேலும் கூறினார்.

“கேப்டன்கள் தவறு செய்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், அனைத்து சிப்பந்திகளும் கேப்டனாக வேண்டுமென்றால் கப்பல் நிச்சயமாக தடங்கலின்றி பயணிக்க முடியாது”, என்பதை ஆன்மீக தலைவர் அசிஸ் வலியுறுத்தினார்.