ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு பெண் கொடுக்க ரெடியா? இதோ பெண்தேடும் படலம்

isis_irakஈராக்கில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளுக்கு மணமகள் தேடும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் திட்டமாகும்.

எதிர்காலத்தில் ஈராக்கின் அண்டை நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது இந்த இயக்கத்தில் 11 ஆயிரம் பேர் உள்ளனர். அதில் 6 ஆயிரம் பேர் ஈராக்கிலும், 5 ஆயிரம் பேர் சிரியாவின் உள்நாட்டுப் போரிலும் ஈடுபட்டு உள்ளனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் சேர்வதற்கு தற்போது 15 ஆயிரம் பேர் வரை தயாராக உள்ளதாகவும், தங்களது படையினரின் எண்ணிக்கையை 60 ஆயிரமாக உயர்த்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் உள்ள திருமணமாகாத ‘ஜிஹாத்’ போராளிகளுக்கு வரன் தேடும் அலுவலகத்தை அந்த இயக்கம் இன்று திறந்துள்ளது.

வடக்கு சிரியாவில் உள்ள அல் பாப் என்ற பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளை திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் இளம் பெண்கள் மற்றும் விதவைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண்களின் வீட்டுக்கே சென்று, முறைப்படி பெண் கேட்டு, இஸ்லாமிய சம்பிரதாயப்படி போராளிகள் மனைவியாக்கிக் கொள்வார்கள் என ஐ.எஸ்.ஐ.எஸ். தெரிவித்துள்ளது.