நாடற்ற சிறார்களில் பலர் சட்டவிரோதமாக வழிகளில் பிறந்தவர்கள்

zaidநாடற்ற  சிறார்களில்  பெரும்பாலோர்  கள்ளத்தொடர்பில்  பிறந்தவர்கள்  அல்லது  அங்கீகரிக்கப்படாத  திருமணத்தின்  மூலமாக  பிறந்தவர்கள் என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி.

“சில  ஆண்கள்  வெளிநாட்டுப்  பெண்களைத்  திருமணம்  செய்வார்கள். அதைத்  தங்களின் சட்டப்படியான  மனைவியிடம்  தெரிவிப்பதில்லை.

“அந்தக்  குற்ற  உணர்வில்,  பிறக்கும் குழந்தைகளையும்  பதிவு  செய்வதில்லை”, என்று  அமைச்சர்  த  ஸ்டார்  நாளேட்டிடம்  தெரிவித்தார்.

சில  முஸ்லிம்  திருமணங்கள்  வெளிநாட்டில்  நடக்கின்றன. அவற்றை  அரசாங்கம்  அங்கீகரிப்பதில்லை,  மாநில  சமய  அதிகாரிகளும்  ஏற்பதில்லை.

பெற்றோரின்  குடியுரிமை  பற்றி  போதுமான  தகவல்கள்  இல்லாத  நிலையிலும்  பிறந்தவுடன்  கைவிடப்படுவதாலும் பலர்  நாடற்றோராக  மாறி  விடுகின்றனர்.

2003 தொடங்கி  இவ்வாண்டு  ஏப்ரல்  வரை  14,095 சிறார்கள்  குடியுரிமை  பெற்றிருக்கவில்லை  என  உள்துறை  அமைச்சின் புள்ளிவிவரம்  தெரிவிக்கிறது.