இந்து சமயத்தை இழிவுபடுத்திய உஸ்தாத்துக்கு கடும் கண்டனம்

Hindu curry powder1இன்று  நூற்றுக்கணக்கானவர்  கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில்    ஒன்று  திரண்டு இந்து  சமயத்தை  இழிவுபடுத்திப்  பேசிய இஸ்லாமிய  சமயப்  பரப்புரையாளரான  உஸ்தாஸ் ஷாகுல்  ஹமிட்-டுக்குக்  கடும்  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டனர்

மஇகாவும் இன்னும் சில  என்ஜிஓ-களும்  அந்தக்  கண்டனக்  கூட்டத்தை  ஏற்பாடு  செய்திருந்தன. அதில்  கலந்துகொண்ட  மஇகா   உதவித்  தலைவர்  எம்.சரவணன்,  பினாங்குக்காரரான உஸ்தாத்  ஷாகுல்  ஹமிட்  உண்மையில்  பாஸ்  உறுப்பினர்தானா  என்று  வினவினார்.

“அது  உண்மையானால்  அவருக்கு  எதிராக  பாஸ்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்”, என்றார்.

ஷாகுல்  ஹமிட்டின்  பேச்சு  ஒரு  காணொளியாக இணையத்தில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது.  அதில்,  அவர்   அழகப்பா,  பாபாஸ்  போன்ற  “இந்துக்களின்” நிறுவனங்களிடமிருந்து  மசாலை  பொருள்களை  முஸ்லிம்கள்  வாங்கக்  கூடாது   என்கிறார்.

“பெர்மாத்தாங்  பாவ்  அருகே  அழகப்பா  தொழிற்சாலைக்குச்  சென்றால், அதன்  முன்வாசலில்  ஒரு  (தெய்வ)  சிலையைப் பார்ப்பீர்கள். நாக்கு  வெளியில்  நீட்டிக் கொண்டிருக்கும்.  ஏன் நாக்கு  வெளியில்  நீட்டிக்  கொண்டிருக்கிறது? விற்பதற்குமுன்  எல்லா  மசாலைத்  தூளையும்  அந்தத்  தெய்வம்  ருசி  பார்க்க  வேண்டும்,  அதற்காகத்தான்”, என்று  ஷாகுல்  கூறுகிறார்.

அவர், இவ்வாண்டு  பிப்ரவரி  மாதம் ஷா  ஆலம்  தொழுகை  இல்லமொன்றில் உரையாற்றியபோது இவ்வாறு  கூறினார். அதன்பின்னர்  அவர், அவ்வாறு  பேசியதற்காக  முகநூலில்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டார்.

அது  தனிப்பட்ட  முறையில்  நடந்த  ஒரு  நிகழ்வு  என்றும்  அந்தக்  காணொளியை  எவரும்  இணையத்தில்  பதிவேற்றம்  செய்வார்கள்  Hindu curry powder3என்பதை  எதிர்பார்க்கவில்லை  என்றும்  அவர்  சொன்னார்.

“அது உண்மையானால், பாஸ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சரவணன் கூறினார்.

 

இந்துக்கள் மறக்க மாட்டார்கள்

 

ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஸுல்கிப்ளி நோர்டின் விவகாரத்தில் நடந்தது போலல்லாமல், இந்தியர்கள் இந்த விவகாரத்தை பல வாரங்களுக்குப் பின்னர் மறந்து விட மாட்டார்கள் என்று சரவணன் கூறினார்.

Hindu curry powder2ஆனால், ஸுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அவரும் மன்னிப்பு கோரினார். அதன் பின்னர், கடந்த பொதுத் தேர்தலில் அவர் பாரிசான் நேசனலின் ஷா அலாம் நாடாளுமன்ற வேட்பாளராகவும் கூட நியமிக்கப்பட்டார்.

ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பினாங்கில் ஷாகுல் ஹமிட்டின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சரவணன் கூறினார்.

இன்று பின்னேரம் வரையில், ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக 400க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக சரவணன் மேலும் கூறினார்.

 

முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு தடை

 

hindu sangam-presidentஷாகுல் ஹமிட்டின் பேச்சு இந்தியர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி விட்டது” என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது.

“எங்களுக்கு சமாதானம் சொல்லி விஷயத்தை ஆறப்போடுவதை விடுத்து உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்”, என்று கூறிய மோகன் ஷான் “அப்படி இவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இந்துக்கள் அனைவரும் முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு முற்றிலும் தடை செய்வோம்”, என்று மோகன் ஷான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் நேசன் (ஜூலை 30) செய்தி மேலும் கூறுகிறது.