மக்ரே, ஹரிசன், சொல்ஹெம், விக்கி ஆகியோர் ஐ.நா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்கவுள்ளனர்?

harrison-solheimசனல்4  ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மக்ரே,  இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம், பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு முன்னிலையில் இவர்கள் சாட்சியமளிக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கெலும் மக்ரே,  பிரான்ஸிஸ் ஹரிசன் ஆகியோர் அடுத்த வாரம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு விஜயம் செய்து சாட்சியமளிக்கவுள்ளனர்.

எரிக் சொல்ஹெய்ம் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும், வட மாகாண முதலமைச்சர் விசாரணைகளில் பங்கேற்பது பற்றி எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களையும் இதுவரையில் வெளியிடவில்லை.

இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினருக்கு புலிகளின் சுவிஸ் வலையமைப்பு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க இரண்டு பேர் முன்வந்துள்ளனர்.

புலிகளின் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இதில் உள்ளடங்குகின்றார்.

TAGS: