நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு அழைப்பும் வரவில்லை – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

tna_logoஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, இந்திய அரசாங்கத்திடம் இருந்து தமக்கு இன்னமும் எந்த அழைப்பும் வரவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து பேர் கொண்ட குழு, அடுத்தமாத துவக்கத்தில் புதுடெல்லி செல்லவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, சந்திப்புக்கான இந்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னமும் அழைப்பு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் வெளியிட்டிருந்தது.

அதற்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும், எனினும், சந்திப்புக்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: