பாஸுக்கு பரிந்து பேசிய டிஏபி மன்னிப்பு கேட்க வேண்டும்

tan‘பாஸ்  அனைவருக்குமானது’  என்றுரைத்து  முஸ்லிம்- அல்லாதாரர் அக்கட்சிக்கு  ஆதரவு  வழங்க  வேண்டும்  என்று வலியுறுத்தி  வந்ததற்காக  டிஏபி  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என்கிறார்  கெராக்கான்  இளைஞர்  தலைவர்  டான்  கெங்  லியாங்.

“வாட்ஸ்அப்-இல்  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்களிடையே  நடந்த  உரையாடல்  அம்பலமானதை  அடுத்து  பாஸ்  அனைவருக்கும்  நல்லது  செய்யும்  கட்சி  அல்ல  என்பது  வெட்ட  வெளிச்சமாகி  உள்ளது.

“முஸ்லிம்- அல்லாதாரைப்  பலியிட்டு  மலாய்  முஸ்லிம்  மேலாதிக்கத்தை  நிலைநாட்டும்  நோக்கத்தைக்  கொண்டது  கட்சி  அது.

“கடந்த  இரண்டு  தேர்தல்களிலும்  ‘பாஸ்  அனைவருக்குமானது’  என்று  உயர்த்திப்  பேசி  வந்ததற்காக டிஏபி  மன்னிப்பு  கேட்க  வேண்டும்”, என்றவர்  கூறினார்.