போலீஸ் அமைதிப் பேரணிச் சட்டத்தைக் காண்பித்து உஸ்தாத்- எதிர்ப்பாளர்களை மிரட்டக்கூடாது

eric2012 அமைதிப்  பேரணிச்  சட்டம் (பிஏஏ) அரசமைப்புக்கு  விரோதமானது  என  முறையீட்டு  நீதிமன்றம்  தீர்ப்பளித்திருப்பதால் அது  ஒரு  “நல்ல  சட்டம்” அல்ல  என்பதைச் சுதந்திரத்துக்கான  வழக்குரைஞர்கள்  அமைப்பு (எல்எப்எல்)  போலீசாருக்கு  நினைவுபடுத்தியுள்ளது.

நேற்று பிரிக்பீல்ட்சில்  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களுக்கு  எதிராக  பிஏஏ-இன்கீழ்  நடவடிக்கை  எடுக்க  முடியும்  என்று  போலீஸ்  எச்சரித்திருப்பதை  அடுத்து  அந்த  என்ஜிஓ  இவ்வாறு  கூறியது.

நேற்று, நூற்றுக்கணக்கானவர்கள்,  இந்துக்களை  இழிவுபடுத்திப்  பேசிய  உஸ்தாத்  ஷாகுல்  ஹமிட்டுக்குக்  கண்டனம்  தெரிவித்து  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

“அச்சட்டம்  அரசமைப்புக்கு எதிரானது  என்று  முறையீட்டு  மன்றம் அறிவித்திருப்பதால்  அது  முற்றிலும்  செல்லாததாகி  விட்டது”, என்று  எல்எப்எல்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்  ஓர்  அறிக்கையில் கூறினார்.