பிரித்தாளும் முறைதான் மசாலைத் தூள் விவகாரத்துக்குக் காரணம்

arulஉஸ்தாத்  இந்துக்களை  இழிவுபடுத்தி  வசமாக  சிக்கிக்கொண்டது  அவருடைய  துரதிர்ஷ்டம்.  ஆனால், அப்படி  ஒரு  சம்பவம்  நடக்க  நாட்டின்  பிரித்தாளும்  முறையில்  வேரோடிக்கிடக்கும்  இனவாதம்தான்  காரணம்  என்கிறார்  மலேசிய  சோசலிஸ்ட்  கட்சி (பிஎஸ்எம்)த்  தலைமைச்  செயலாளர் எஸ்.அருட்செல்வன்.

“பிரித்தாளும்  முறையில்  பிறந்து  விட்டோம். வர்க்கப்  போராட்டம்  நடத்தி  இம்முறையைத்  தகர்த்தெறியாவிட்டால் எல்லா  இன  மக்களுமே  பாதிக்கப்படுவார்கள், துன்பப்படுவார்கள்”, என்றாரவர்.

“மலேசியாவில்  இனவாதம்  நீக்கமற  நிறைந்துள்ளது நிதர்சன  உண்மையாகும்.

“இந்திய,  சீனத்  தலைவர்களில்  பலரும்கூட,  தனிப்பட்ட  முறையில்   நடக்கும்  கூட்டங்களில்  தங்கள்  இனத்தவரிடம்  பேசுகையில்  சொந்த  இனத்தாரிடமிருந்தே  பொருள்களை  வாங்க  வேண்டும்  என்றுதான்  கேட்டுக்கொள்வார்கள்.

“பல்லின  நிகழ்வுகளில் மட்டும்  எல்லாருடைய  இதயங்களையும் தொடுவதுபோல்  இனிமையாக  பேசுவார்கள்”.

உஸ்தாத்தின்  துரதிர்ஷ்டம்  காணொளியால்  அவர்  மாட்டிக்கொண்டார்  என்று  அருட்செல்வன்  கூறினார்.

உஸ்தாத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  நடத்திய  மஇகா-வினரையும்  அவர்  சாடினார். மஇகா, மலாய்  மேலாதிக்கத்துக்காக  போராடும்  பெர்காசா, இஸ்மா  போன்ற  அமைப்புகள்போலவே  நடந்து  கொண்டிருக்கிறது  என்றாரவர்.