ஷாகுல் போன்ற ‘இனவாதிகளை’ பாஸ் களையெடுக்க வேண்டும்

ramasamyபாஸ்,  இந்துக்களை  இழிவுபடுத்திப்  பேசிய  அதன்  உறுப்பினரான  மார்க்கப்  பேச்சாளர்  ஷாகுல்  ஹமிட்டுக்கு  எதிராக  ஒழுங்கு  நடவடிக்கை  எடுத்துக்கொள்ள  வேண்டும்  என  பினாங்கு  துணை  முதலமைச்சர் II, பி.இராமசாமி   வலியுறுத்தியுள்ளார்.

ஷாகுல் இந்துக்களிடம்  மன்னிப்பு  கேட்டுக்கொண்டிருந்தாலும்  பாஸின்  பெயரைக்  கெடுத்ததற்காக  பாஸ்  அவரைத்  தண்டிப்பது அவசியம்  என்றாரவர்.

“பாஸ் கட்சியில்  உள்ள  இனவாதிகளையும் கயவர்களையும் களையெடுக்கவும்  நடவடிக்கைகள்  எடுக்க  வேண்டும்”,  எனவும் இராமசாமி  கேட்டுக்கொண்டார்.