பிகேஆர் தண்ணீர் உடன்பாட்டைக் கெடுத்து விடக் கூடாது

georgeமாநில  மந்திரி  புசார்  விவகாரத்தில்  உள்ளுக்குள்  சர்ச்சையிட்டுக்  கொண்டிருக்கும்  பிகேஆர்,  சிலாங்கூர்  அரசும்  மத்திய  அரசும்  செய்துகொண்டிருக்கும்  தண்ணீர்  உடன்பாட்டைக்  கெடுத்து  விடக்  கூடாது  எனப்  பயனீட்டாளர்  சங்கம்  ஒன்று  வலியுறுத்தியுள்ளது.

பனீட்டாளர்கள்  ஏற்கனவே  மாநிலம்  போதுமான  தண்ணீரைக் கொண்டிருக்கிறதா  என்ற  கவலையில்  இருக்கிறார்கள்  என்று  சுபாங், ஷா  ஆலம்  பயனீட்டாளர்  சங்கத்  தலைவர்  ஜேக்கப்  ஜார்ஜ்  கூறினார்.

“அவர் (சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிம்) புத்ரா  ஜெயாவுடன்  பேச்சு  நடத்தி தண்ணீர்  விவகாரத்துக்குத்  தீர்வுகாண  மேற்கொண்ட  முயற்சிகளைப்  பாராட்டுகிறேன். எடுத்த  வேலையை  முடிப்பதற்கு அவரை அனுமதிக்க  வேண்டும்” என்றவர்  கேட்டுக்கொண்டார்.

தனிப்பட்ட  அரசியல்  மாநில  நிர்வாகத்தில் குறுக்கிடக்  கூடாது.

தண்ணீர்  உடன்பாட்டை  ஒரு  மாதத்துக்குள்  சீர்  செய்யாவிட்டால்  பிகேஆர்  தலைமையகத்துக்குமுன்  ஆர்ப்பாட்டம்  செய்யப்போவதாகவும்  ஜார்ஜ்  எச்சரித்தார்.