அசிசா எம்பி ஆவதற்கு டிஏபி ஆதரவு

aziபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங், பிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா   வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்   மந்திரி  புசார்  ஆவதற்கு  ஆதரவு  தெரிவித்துள்ளார்.

பல  வாரங்களாக  அது  பற்றி  எதுவும்  பேசாதிருந்த  லிம், மந்திரி  புசார்  ஆவதற்கான  தகுதி  அசிசாவிடம்  இருக்கிறதா  என்று  மட்டுமே  பார்க்க  வேண்டும்  மற்ற  விவகாரங்களில்  கவனம்  செலுத்த  வேண்டியதில்லை   என்றார்.

“பெண்  என்பதற்காக  அவரை நிராகரிக்கப் போகிறோமா?”, எனவும்  லிம்  வினவினார்.

“பக்காத்தானோ  பிஎன்னோ  எல்லாக்  கட்சிகளும் முதலில்  இதைத்  தெளிவுபடுத்த  வேண்டும்”, என்றாரவர்.

மாநில  அரசமைப்பு ஒரு  பெண்  எம்பி  ஆகக்  கூடாது  என்று  கூறவில்லை. அது  ஆண்-பெண்  வேறுபாடு பார்ப்பதில்லை.

“எல்லாக்  கட்சித் தலைவர்களும்  தகுதியுள்ள  ஒரு  பெண்மணி  எம்பி  ஆவதை  எதிர்க்கவில்லை,  ஆதரிக்கிறோம்  என்பதைத்  தெரிவிக்க  வேண்டும்”, என்று லிம்  கேட்டுக்கொண்டார்.