அமெரிக்காவின் அறிக்கை விளங்கவில்லை: நேரடி தாக்குதலில் இறங்கியுள்ள இலங்கை அரசு !

sriகடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழில் இருந்து கொழும்பு சென்ற தமிழ் செய்தியாளர்களை, ஓமந்தையில் மறித்த பொலிசார் அவர்கள் பயணித்த வாகனத்தின் மிகவும் கீழ் தரமாக கஞ்சாவை வைத்து, ஏதோ இந்திய சினிமா படங்களில் வருவது போல நாடகமாடியுள்ளார்கள். இதற்கு தமிழ் ஊடகவியலாளர்கள் பயந்து ஒதுங்கவில்லை. மறாக அவர்கள் துணிந்து நின்று போராடினார்கள். இறுதியில் ஒன்றுமே செய்யமுடியாமல் பொலிசார் திண்டாடிப்போனார்கள். இது நடந்து முடிந்த கையோடு, அமெரிக்கா நேற்றைய தினம்(31) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டும் என்று அது கோரிக்கை விடுத்தது.

இதனால் முன்னெப்பொழுதும் இல்லாத வாறு, இலங்கை அரசு கடும் ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்கா என்ன சொல்ல வருகிறது என்று எமக்கு புரியவில்லையென்றும், அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிவதாகவும், இலங்கை வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அறிக்கையை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இது உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா உள்நாட்டு பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதே நல்லது என்னும் பொருள்படும் விதத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

TAGS: