மகாதிர்: எனக்கே தணிக்கை என்றால் மற்றவர் எழுத்துகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும்

dr mமுகநூலில்  தம்  பதிவு  தடுக்கப்பட்டிருப்பதால்  ஆத்திரமடைந்துள்ள  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசியாவில்  இணையம்  தணிக்கை  செய்யப்பட வேண்டும்  என்று  கூறியுள்ளார்.

“ அரசாங்கங்கள்,  குறைந்தபட்சம்  மலேசிய  அரசாங்கமாவது  இணையத்தைத்  தணிக்கை  செய்ய  வேண்டிய  தருணம்  வந்துவிட்டது  என்று  நினைக்கிறேன்”,  என  மகாதிர் இன்று  மாலை  தம்  வலைப்பதிவில்  கோபமாகக்  குறிப்பிட்டிருந்தார்.

மலேசியாவில்  பல்லூடக  பெருவழி (எம்எஸ்சி)  தொடங்கப்பட்டபோது  பிரதமராக  இருந்த  மகாதிர்,  இணையத்தில்  தணிக்கை இருக்காது  என்று  உத்தரவாதம்  அளித்திருந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது. அவருக்குப்பின்  வந்தவர்களும்  அதைப்  பின்பற்றுகிறார்கள்.

“இணையத்தின்  வலிமை  அறியாமல் (பிரதமராக இருந்தபோது) அப்படி  வாக்குறுதி  அளித்து  விட்டேன். ஆனால்,  இப்போது  எண்ணத்தை மாற்றிக்  கொண்டு  விட்டேன்”, என்றாரவர்.