தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும்? – அரசாங்கம் எச்சரிக்கை

tna-ltteதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அரசாங்கம் போர்க்குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளினால் நடாத்தப்படும் சர்வதேச விசாரணைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளித்தால், இவ்வாறு விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் மேற்கொள்ளப்பட்ட போர்ககுற்றச் செயல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டபைமப்பினர் உடந்தையாக செயற்பட்டனர் என்ற அடிப்படையில் விசாரணைகளை நடாத்த நேரிடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்த ஆவணங்கள் முல்லைத்தீவு பதுங்கு குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில்,  கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எந்தவொரு குற்றச் செயல்களிலும் தொடர்புபடாதவர்களைப் போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கு இடையிலான தகவல்கள் தொடர்பிலும் முல்லைத்தீவில் மீட்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் விசாரணைகளில் பங்கேற்கப் போவதாகவும் அதற்கான சாட்சியங்களை ஒன்றுதிரட்டி வருவதாகவும் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: