அநியாயம்: 12Aக்கள் பெற்ற மாணவி விரும்பிய துறையில் படிக்க இடமில்லை

 

Top scorer1எஸ்டிபிஎம் மற்றும் எஸ்பிஎம் ஆகிய இரு தேர்வுகளிலும் 12Aக்கள் பெற்ற மாணவி இங் யி லிங் அவர் விரும்பிய மூன்று துறைகளில் ஏதாவது ஒன்றை படிப்பதற்கு ஒன்பது அரசு பல்கலைக்கழகங்களுக்கு மனு செய்திருந்தார்.

கிள்ளானை சேர்ந்த அம்மாணவி மருத்துவம், பல்மருத்துவம் அல்லது பார்மஸி படிக்க விரும்பினார். ஆனால், அவருக்கு ஒதுக்கப்பட்டது தாதியர் படிப்பிற்கான இடம்.

மாணவி இங்கின் அவலநிலையை ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த சிலாங்கூர் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் அம்மாணவிக்கு தனியார் பல்கலைக்கழகத்தில் இடம் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை பெற ஆவன செய்யப் போவதாக கூறினார்.

பிரதமர்துறையில் ஏராளமான அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு இம்மாணவிக்கு உதவி செய்வதற்கு வழி காணலாம் என்று தெங் மேலும் கூறினார்.

Top scorer2இவ்வாறு பாதிக்கப்பட்டவர் இங் மட்டுமல்ல. 2004 ஆண்டில், கூங் லின் யீ என்ற மாணவர் அவரது எஸ்டிபிஎம் அறிவியல் பாடத்திற்கான தேர்வில் மலேசியாவின் மிகச் சிறந்த மாணவர் என்று அறிவிக்கப்பட்டார். ஆனால், மலாயா பல்கலைகழகத்தில் மருத்துவம் படிப்பதற்கு அவர் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டது. அப்போது இந்த அநியாயத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு சிறந்த மாணவியின் கனவில் மண்ணைப் போடும் இவர்களை என்ன செய்வது? மீண்டும் அவர்களையே தேர்ந்தெடுப்போமா?