மகாதிர்: இனவாதமற்ற மலேசியாவா?

 

Mahathir - no chanceஇனவாதத்தால் பிளவுபடாத மலேசியா உருவாகும் நாளை எதிர்பார்த்து பலர் கனவு கண்டு வருகின்றனர். ஆனால், முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் அதற்கான வாய்ப்புகள் “மிகக் குறைவே” என்று கூறுகிறார்.

“நாம் தொடர்ந்து இன அடிப்படையில்தான் அடையாளம் காணப்படுவோம் ஏனென்றால் சமுதாயத்தில் இருக்கும் தீவிரவாதிகளால் கூறப்படுவதை சமுதாயத்திலுள்ள மிதவாதிகள் எதிர்க்க துணிச்சலற்றவர்களாக இருக்கிறார்கள்” என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.

“அதன் காரணமாகவும், நாம் மாற விரும்பாததாலும், ஓர் உண்மையான மலேசியன் இருக்கப் போவதே இல்லை”, என்று கூறிய அவர், அதற்கான பழியை சிறுபான்மையினர் மீது போட்டார்.

மாறாக, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் குடியேறிகளும் அவர்களுடைய குழந்தைகளும் உள்ளூர் பண்பாட்டையும் மொழியையும் தங்களுடையதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Mahathir - no chance1அவரது கூற்றுக்கு எடுத்துக்காட்டாக தாய்லாந்து பிரதமர்கள் தாக்சின் சினவட்ரா மற்றும் சுவான் லீக்பாய், முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் கொரசோன் அகுய்னோ மற்றும் ஜாகர்த்தாவின் கவர்னராக பதவி ஏற்கவிருக்கும் பாசுகி தஜாஹாஜா பூர்ணமா ஆகிய அனைவரும் சீன வழிவந்தவர்கள் என்றாரவர்.

“அவர்கள் தங்களை முற்றிலும் நாட்டோடு அடையாளப்படுத்திக் கொண்டு விட்டனர். அவர்கள் தங்களை ‘நாங்கள்Indo rupiah1 இந்தோனேசிய சீனர்கள்’ என்றெல்லாம் கூறிக்கொள்வதில்லை. கொரசோன் அகுய்னோ அல்லது அவரது மகன் (தற்போதைய பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகுய்னோ III) ஆகியோர் ‘நாங்கள் பிலிப்பினோ சீனர்கள்’ என்று கூறிக்கொள்வதில்லை.

“சிலர் இன்னும் அது போன்றவற்றை சொல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு பதவிகள் (அதிகாரம்) கிடைக்காது”, என்று மலாய்க்காரர்கள் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசாவின் புரவலரான மகாதிர் கூறினார்.

இந்தோனேசியா அதன் தாள் நாணயத்தில் விநாயகர் உருவத்தைப் பதித்துள்ளதை மகாதிர் கூற மறந்து விட்டார்.