700 பேரை கொன்று குவித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்

isss_001ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மோசுல் நகரை மீட்பதற்கான மோதல்களில் குர்திஸ் படைத்தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு அமெரிக்காவின் வான்படையினரும் உறுதுணைக்காக ஆதரவு வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் மிகப்பெரிய நீர்நிலையை மீட்கும் நோக்கில் நேற்று முதல் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களை இனப்படுகொலைகளுக்கு உட்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியா மற்றும் ஈராக்கை மையப்படுத்தி கடுமைவாத முஸ்லிம் நாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களில் மட்டும் சிரியா நாட்டின் எண்ணை வளம்மிக்க கிழக்கு பகுதியான டெய்ர் எஸார் மாகாணத்தில் உள்ள க்ரணிஜ், அபு ஹமாம், கஷ்கியே உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 700 பழங்குடியின மக்களை ஐ.எஸ்.ஐ.எஸ்.படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அவர்களில் 600 மேற்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் எனவும் அங்குள்ள மனித உரிமை கண்காணிப்பகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த படையினரால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் உள்ளிட்ட சுமார் 1800 பேரின் கதி என்னவாயிற்று? என்பது தொடர்பாக எந்த தகவலும் இல்லை எனவும் இந்த அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.

http://world.lankasri.com/view.php?22cM08Sd2045nBnb4e2cyOl7ecb2C6A40dd04IMCC2bce7lOc3e4bnBnB4303dS80Mc3