அரசியல்ல இதெல்லாம் சகஜமா?

சிலாங்கூர் இடைத்தேர்தலை சந்திக்க மலேசியா அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை ! என்ன காரணம்?

கடந்த ஒரு மாதமாக கயிறு இழுக்கும் சிலாங்கூர் மாநில அரசியல் விளையாட்டில் முற்றுப்புள்ளி வைக்க இடைதேர்தல் அல்லது snap திடீர் தேர்தல் அல்லது படார் தேர்தலை வைத்துக்கொள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை.

பிரதம துறை அமச்சர் புதிதாய் போன மாஹ சொல்கிறார் 50 மில்லியன் பிடிக்கும் தேவை இல்லாத செலவு என்று.  நமது நாட்டு ஜனநாயகம் செழிக்க மக்கள்  குரல் ஒலிக்க 50 மில்லியன் ஒரு தடை என்றால் இந்நாட்டுக்கு அரசியல் ஜனநாயக உரிமை ஜப்சிக்கு சமம்.

காரணம் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற பங்கீடு கட்சி ரீதியில் எந்த தனி கட்சியும் பெரும்பான்மையில் இல்லை. BN 12  PKR 13 பாஸ் 14 DAP 15
2 இரண்டு சுயேட்சைகள். இவைகளை தனித்தனியே பார்த்தால் மாநில அதிக பட்ச ஆளுமை எதுக்கும் இல்லை எனலாம்.

பாகாதானில் பதிவில்லா வசதி அரசியல் திருமணம் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் எபதுபோல இன்று மீண்டும் ஒரு மறுதிருமணம் நடந்துள்ளது.

நடப்பில் உள்ள மாப்பிள்ளை புதிய கட்சி, புதிய மணமகளை பார்க்கலாம் என்ற பம்பர சுற்றல் துவங்கி உள்ளது? ஆக  PKR  உடையும் சூழலில் காலீத் எல்லா 56 தொகுதிகளிலும் ஆளை இறக்கினால் பாக்காதானின் இன்றைய புகழ்ச்சிக்கு புகைமூட்டம் மக்களை திணற செய்து சும்மா இருந்த சங்கு அல்லது ஊதாங்குழலை ஊதி கெடுத்த நிலையில் மரண ஊர்வலம் வரலாம்.

சிலாங்கூர் பாமர மக்கள் பல  வேளைகளில் அரசியல் வாதிகளின் திருகுதாளங்களை தெரியாமல் வட்டார வாத்துகளின் அரசியல் கூச்சலுக்கு கொடாப்பு ஏறி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று “எபபடியாச்சும்”போங்கடா என்று வாகுகளை வீசிவிடுவது வழக்கம்.

கால் தவறினால் கரணம் என்பது போல சிலாங்கூரில் இடைதேர்தல் வரலாம் என்பது பல அறிவாளிகளின் நிசப்தம். அதில் BN தலைவர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒன்றும் கூட. பால்  ருசிகண்ட பூனை சொம்மா இருக்காது அதுக்கு 50 மில்லியன் மக்கள் வரிப்பணம் ஒரு பொருட்டே இல்லை ! எத்தனையோ கடன்களில் இதுவும் ஒரு turnaround  capitalization தொழில் தான்.

BN தலைவியர் சொன்னால…………….கேற்பார் /கள்…என்ற நம்பிக்கையில் இடைதேர்தல் வந்தால் BN ரெடி! TS அவர்களும் அதே 50 மில்லியன் ஒரு தடை அல்ல!

இதில் பிச்சை எடுக்க யோசிப்பது மற்ற இரு வெங்காய வேங்கைகள் தான ! முந்தியாசும் TS  இருந்தார் ,இப்போது அதுவும் இல்லடா நொள்ளைக்கண்ணா கதைதான்.

இது ஒரு கற்பனை கதையாக கூட நீங்கள் படிக்கலாம். இதன் சுவாரீசியம் என்ன என்றால். மலேசியா அரசியல் குடும்ப கதையால்
அஸ்ட்ரோ சீரியல் இப்போ சீரியஸா போவது வேடிக்கைதான்.

சமயங்களில் தமிழ் நாட்டு அரசியல் தனம் பூந்துவிட்டதோ என்று
சிரிப்பா வருது….ஆனாலும் அதையும் மிஞ்சி அத்தானும் மனைவியும் பூச்சாண்டி அரசியல் அதற்கு ஓட்டசு வீசும் DAPPA கட்சியும் PASANGU பவித்திரமும் ” உடுட்டை ” மறந்து “சரியாவை” துறந்து  ஒத்தாசிதனம் விசித்திரம்தான்.

சரி இப்போது அந்த துணிச்சல் சங்கதிக்கு வரேன்!

காலீத் TS புதிய கட்சியோடு  கோதாவில் இறங்கினால் இரண்டு முனை மூன்றாக PKR DAP PAS வோட்டுகள் தலா 30 % சிதறும் வாய்ப்பு உண்டு.

இதில் பொதுத்தேர்தல் வர 3 ஆண்டுகள்தாம் உள்ளது BN னிடம் வசமாகி பழைய ரிபேர்களை சரி  செய்ய தெலுக் இந்தான் போல நேரம் பார்த்து பட்டம் திசை மாறி கோட்டைக்கு போனாலும் நியாயங்கள் நிறுவிக்கு ஆதாரமாக போகலாம்.

சிலாங்கூர் மக்கள் சல்லாப காதல் காரணமாக TS கு தொடர வாய்ப்பு தந்தாலும் மிகை இல்லை. காரணம் அவருக்கு இளைத்த காஜாங் காற்று இப்போதைக்கு ஓட்டை பலூனாய் புஷ் என்று தோய்ந்து விட்டது.

திருவிழா வழுக்கு மர போட்டி ஞாபகத்துக்கு வருது…பண முடிச்சி உச்சியில் இருக்கும். வழுக்கு மரம் ஏற  தாங்கி பிடிக்க இரண்டு தடியங்களாவது கிழே நிற்பாணுங்க ! அதுபோல வழுக்கி வழுக்கி ஏறும் நிலையில் சிலாங்கூர் மாநில நிர்வாகம் பல ஓட்டைகளால் எலிகள் புகுந்து சுரண்டலுக்கு ஆளகும்போல தெரியுது.

அரசு ,அரசியல் ,சுல்தான் முடிவு என்னமோ நமக்கு தெரியாது.
ஆனால் களைப்புதான் சரியான ஜனநாயக விமோர்சனம் .
காரணம் அரசியல் அடவாடிகள் சுய நல கொட்டம் அடங்க
வேண்டும். உண்மைகள் ஊமையாக ஊசல் ஆடுவது இந்த நாகரீக காலத்தில் அநியாயம்தான்.

இதெல்லாம் அரசியலில் சகஜமென்றால் அரசியல் பண்பு மலர இன்னும் 100 ஆண்டுகள் தேவை 2020 வது ஒரு பூஜ்யமே !

– பொன் ரங்கன்