புத்தம்!! -(சிவாலெனின்,சுங்கை,பேராக்)

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Bodhபுத்தனின் சிந்தனைகள்

இங்கு

குழிதோண்டி

புதைக்கப்பட்டது……

இரத்தத்தில் வெற்றி

கொண்டாட்டங்கள்

இனவெறி சதுராட்டத்தில்

மனித மிருகங்கள்…….

பௌத்தம் எனும்

அறிவியக்கத்தின் அடாவடிதனம்

காவியுடையில்

புத்தபிக்குகளின் இனவெறியாட்டம்…..

ஆட்சிகள் மாறின

அதிகாரவர்கத்தின் அராஜகம்

மாறவில்லை

ஆண்டப்பரம்பரை மீண்டுமொருமுறை

ஆளாநினைக்குது

அதிகாரவர்கத்தை அழிக்க

துடிக்குது…….

புத்ததின் புத்திமதிகள்

புதைகுழியில்

தஞ்சமானது

மனித உயிர்கள்

சிங்களவனுக்கு விளையாட்டானது……

அன்பு பாத்திரம்

வீசியெறியப்பட்டு

புத்தபிக்குகளின் கைகளில்

தமிழர்களின் மண்டையோடுகள்!!!

(சிவாலெனின்,சுங்கை,பேராக்)

TAGS: