அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்: வீடியோ வெளியிட்டு பரபரப்பு

isiliraqவாஷிங்டன், ஆக. 20–

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ தீவிரவாதிகள் பிடித்துள்ளனர். அவற்றை ஒற்றிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்கள் தீவிரமாக முன்னேறி வருகின்றனர். அதை தடுக்க அமெரிக்கா ஈராக்கில் அவர்கள் மீது வான்வெளி தாக்குல் நடத்துகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாதிகள் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் செய்தி சேகரிக்கும் அமெரிக்க பத்திரிகை நிருபரை தலை துண்டித்து படுகொலை செய்தனர்.

இந்த நிருபரின் பெயர் ஜேம்ஸ் போலே. இவர் சிரியாவில் செய்தி சேகரித்து வந்தார். கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 22–ந்தேதி முதல் இவரை காணவில்லை. இவருடன் ஸ்டீவன் ஜோயல் கோட்லாப் என்ற நிருபரும் மாயமானார்.

இந்த நிலையில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தீவிரவாதிகள் ‘யூடியூப்’ மற்றும் ‘அல் புர்கான் மீடியா’ ஆகிய இணைய தளங்களில் ஒரு வீடியோவை ஒளிபரப்பினர். 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில் நிருபர் ஜேம்ஸ் போலேயின் தலை துண்டித்து கொலை செய்யப்படும் காட்சி இடம் பெற்றிருந்தது.

அந்த வீடியோவுக்கு ‘அமெரிக்காவுக்கு ஒரு தகவல்’ என பெயரிட்டுள்ளனர். அதில் ஆரஞ்ச் நிற உடையில் நிருபர் ஜேம்ஸ் போலோ கைதியாக இருக்கிறார். அவர் அருகே முகத்தை மூடிய நிலையில் தீவிரவாத நிற்கிறான்.

அதன் பின்னர் ஜேம்ஸ் போலே தனது குடும்பம், உறவினர்கள் மற்றும் அமெரிக்க அரசுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்து பேசுகிறார். பிறகு அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு பிணமாக சாய்கிறார்.

அதை தொடர்ந்து தீவிரவாதி அரைகுறை ஆங்கிலத்தில் பேசுகிறான். அதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசும்போது, ஈராக்கில் உங்களது (அமெரிக்கா) ராணுவம் குண்டுவீசி தாக்குகிறது. முஸ்லீம்கள் சாவுக்கு காரணமாக உள்ளது.

அங்கு நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும், பாதுகாப்பையும் மறுத்தால் உங்களது மக்கள் இதுபோன்று ரத்தம் சிந்துவார்கள்.

உங்களது அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மற்றொரு பத்திரிகை நிருபர் ஸ்டீவன் ஜோயில் கோட்லோப் உயிர் பிழைப்பார். அது உங்கள் கையில்தான் உள்ளது’’ என்று தெரிவிக்கிறான்.

இந்த வீடியோவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

-maalaimalar.com