போலீஸ்:கார்ல்ஸ்பெர்க் ஆலையை வெடிவைத்து தகர்க்கத் தீவிரவாதிகள் திட்டம்

militantதீவிரவாதிகள்  என்று  சந்தேகிக்கப்படும்  ஒரு  கூட்டத்தினர் கோலாலும்பூருக்கு  அருகில்  உள்ள  கார்ல்ஸ்பெர்க்  பீர்  ஆலையைத் தகர்க்கும்  நோக்கத்துடன்   குண்டு  தயாரிப்புக்குத்  தேவையான  பொருள்களை  வாங்கி  வைத்திருந்ததாக போலீஸ்  பயங்கரவாத-எதிர்ப்புப்  பிரிவு  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார்.

சீரியாவிலும்  ஈராக்கிலும்  இஸ்லாமிய  அரசின்  எழுச்சியால்  ஊக்கம்பெற்ற தென்கிழக்காசிய  தீவிரவாதிகள்,  உள்நாட்டில்  ஒரு  தாக்குதல்  நடத்தத்  திட்டமிட்டது  இதுவே  முதல்  தடவை  எனத்  தெரிகிறது. ஆனால், அத்திட்டம்  “பேச்சளவில்” மட்டுமே இருந்திருக்கிறது.

19 பேரடங்கிய  அக்கூட்டம் குண்டு- தயாரிப்புக்குப் பயன்படும்  அலுமினிய  தூளை வாங்கி  வைத்திருந்ததாக பயங்கரவாத-எதிர்ப்புப்  பிரிவு துணைத்  தலைவர்  ஆயுப்  கான் மைடின்  ராய்ட்டரிடம்  கூறினார்.

அவர்களில்  எழுவர்மீது  பயங்கரவாத  மற்றும்  ஆயுதங்கள்  சட்டங்களின்கீழ்  குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக  ஆயுப்  கான்  கூறினார். இவர்கள்தான்  பீர்  ஆலையையும்  மதுபான விடுதிகளையும்  தகர்ப்பது பேசி  விவாதித்திருக்கிறார்கள்.

மற்ற  12  பேரும் போதுமான  சாட்சியங்கள்  இல்லாததால்  விடுவிக்கப்பட்டனர்.