எம்பி-இன் உதவியாளர் கூறியதை எம்பி-இன் வழக்குரைஞர் மறுக்கிறார்

samadசிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு  பேங்க்  இஸ்லாத்தில்  இருந்த  கடனை  மத்திய  கிழக்கு  வங்கி  ஒன்று தீர்த்து  வைத்ததாக  காலிட்டின்  சிறப்பு  அதிகாரி  அஸ்ருல்  அஸ்வார்  அஹமட்  தாஜுடின்  கூறியிருப்பதை  அவரின் வழக்குரைஞர் மறுக்கிறார்.

“எந்த  மத்திய  கிழக்கு  வங்கியும் காலிட்டின்  கடனைச் செலுத்தவில்லை  என  மந்திரி  புசாரின்  வழக்குரைஞர்(தாமஸ்  பிலிப்)  என்னிடம்  தெரிவித்தார்”, என பாஸ்  எம்பி  காலிட்  சமட்(இடம்)  கூறினார்.

காலிட்டின்  குறைகளைப்  பட்டியலிட்டு  பிகேஆர்  வெளியிட்ட  91-பக்கத்  தொகுப்பிலும்  இந்த  ரிம59.5 மில்லியன் பேங்க்  இஸ்லாம்  கடன்  பற்றிக்  குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்துக்கு  வெளியில் கடனுக்குத்  தீர்வு  காணப்பட்டதை  ஒப்புக்கொண்ட   வழக்குரைஞர்  பிலிப்,   தம்  ஆலோசனைப்படி   காலிட்  நடந்து  கொண்டார் என்றும்  கூறினார்  என காலிட்  சமட்  தெரிவித்தார்.

“ஆனால்,  பிலிப்  நீதிமன்றத்துக்கு  வெளியில்  தீர்வுகாணப்பட்ட  விதத்தை  விவரிக்கவில்லை. அதை  வெளியிட  காலிட்டின்  அனுமதி  இல்லை  என்றார்.

“கடன் தொகை  செலுத்தப்பட்டதை  மட்டுமே  உறுதிப்படுத்தினார். தொகையைக்கூட வெளியிட  விரும்பவில்லை”, என  அந்த  ஷா  ஆலம்  எம்பி  கூறினார்.