அரசியலால் மானுட நிஜங்கள் மரணிக்கின்றன ?

பாகாதான் என்ற மூன்று கூட்டணி முன்னணிகள.அதிலிரண்டு பேரளவில் மூவின முன்னோடிகள்.ஒன்று கிளப்பு வெச்சி இந்தியனையும் சீனனையும் “சரியாவில்” குழப்பி “உடூடில்” அமுங்கி முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் “பாக்காட் ” தற்கால இணைப்பில் அல்லது  ”இகாட்டில்” உலகில் அரசியல்  நடத்தும் ஒரே கட்சி ( முதல் இரவு காட்சி) என்றும் வைக்கலாம். காரணம் வெடிந்தால் என்ன ஆகும் ? யார் என்ன பண்ணலாம் என்ற விரக்தி அரசியல் ஆட்சிதான் பாகத்தான்.

15 சட்ட மன்றங்களை வைத்து இருக்கும்  பாஸ்சுக்கு MB  பதவி போனாலும் அவர்களின் பாஸ் ஆட்சி மனப்பால் தாய் பாலாக வடியும்போது பூதிங்குகள் தேவை இல்லை என்று DAPVUKKUM ,PKRUKKUM   செம்ம பூட்டு போட்டாலும் நம்ப மீண்டும் கோச டப்பாக்கள் தான்.

எதிலும் உருப்படாத இந்தியன் (தமிழன் இல்லை) நாளை கொக்கா,ஜோக்கா கஞ்சிக்கு ஓடு தூக்கும் நிலைதான். எக்ஸ்கோவில் வானும் அஸ்மின் மீண்டும் சேவியர் வரலாம். வாழ்த்துகள். சாதனைகள் விண்ணை  கிழித்து வருமா என்று தொங்கித்தான் பார்க்க வேண்டும்.

கனம் சுல்தான் அவர்கள் விரைந்து வருவதால் எல்லோர் இதயமும் டுபாக் டுபாக் அடிப்பது தெரிகிறது.

இதில் என்ன வேட்டிகை வெடித்தனம் என்றால் கடந்த 6 ஆண்டுகளாக MB ஈசல் தன ஆதரவு கூட்டங்கள் மழைகால மஞ்சள் வெயில் நேரம் பார்த்து காலீட்டை மேய்ந்து  வரும் சோகம் மனித அநாகரீகமாகும். அரசியலால் எப்படியெல்லாம் துப்பு கெட்டு பத்திரிக்கை வாய் வீச்சு நடத்துவதை பார்க்கையில் சார் பெர்னாட் ஷா சொன்னது உண்மையாகுது. அவர் சொன்னார் “மனிதனில் கடைசி அயோக்கிய தனம் அரசியலில்தான் முடியும் என்றார்”  எவ்வளவு உண்மை !

தேசிய அரசியல் பேராசிரியர் மன்ற தலைவர் சொல்லியுள்ளார் ஒரு தலை சிறந்த மாநில நிர்வாகிக்கு இது நடந்து இருக்கக கூடாது என்று
கூறுகிறார் அவர்….

” Tan sri’s performances is reflective of the new politics people want to see in  this country putting aside differences and rivalry with BN for the benefit of the people and the state. This is the political era of federal and state should lead. But unfortunately DAP,PKR and  PAS are not able to look at the broader picture to paakaathan CHANGE symbol.  இது விளங்காதவர்கள் இது பற்றி வியாக்கினம் எழுத வேண்டாம்.

இது பாகாதனின் உண்மை உருவத்தை காட்டி உள்ளதாக பலர் சொல்லுகின்றனர்.அதிலும் ஒருவரின் தனி அபிலாசைகள் ஆளுமைக்கு கட்சி தலைவர்கள்  குருடாகி  போனது அரசியல் துர் நாற்றம் எனலாம்.

வானுக்கு வழி விட மறுத்தது அவரிடம் சில நியாயங்கள்  இருக்கும். என்பதையும் நாம் சீர் தூக்கி பார்க்க வேண்டும். நிர்வாக தப்பு என்றால் MACC புகார் ஒரு சிறந்த சட்ட வழிதான்.

பாகாதனில் நேர்மைக்கு கிடைத்த அரசியல் பரிசு என்று MB சொல்வது தனது சேவை உணர்வை, கடமையை மக்கள் உணர்ந்தாலும் அரசியல் சந்தர்பிகள் நொண்டி சிந்தனையால் தம்மை அசிங்கப்பதுதியது வேதனையுடன் பதிவு செய்துள்ளார்,

மக்கள் சுமைகள் ,சமூகம் , இன வரிசை YB கள்.  அரசியல் பதவி ஆளுமை தலைவர்கள், ஆதரவு தலைவர்கள், மூன்று கட்சி தலைவர்கள் அதையும் தாண்டி ஒரு மாநில முதல்வரின் பிற கட்சிகளின் வணிக சம தரம் தர்ம ஜனநாயக நிர்வாகம் என்ற கடமையில் தப்பிக்க முடியாத பொறுப்பு மேலோங்கி நிற்கும்.

மாநில மக்கள் நலன் கருதி நடுவண் அரசுடன் நியாயமான தேவைகளில் சுயமாக தீர்வு காண MB உரிமை உள்ளதை தெரியாத சமூக  அரசியல் தலைவர்கள்  அபாண்ட பழிபோட்டு திசை திருப்புவதை பல NGO கள் எதிர்த்துள்ளனர்.

பாகாதான் குறிப்பா PKR  அரசியல் என்பது BN பழைய உருப்படிகள் களைந்து, கிழிந்து  மீண்டும் அதே பதவி அட்டகாசம் ரேபோர்மாசி என்ற கூத்துடன் அந்த வார்த்தைக்கே அவமானமாக பரதேசியாய் நிற்கிறது.

நான் அந்த கட்சியில் இருக்கேன் என்பதற்கு வாழும் கீழும் தாங்கினால் தலைவன்கள் அராஜக போக்கினால் மண்ணாய் போவது மக்கள்தான்.

இந்நாட்டின் சுதந்திரத்தின் போது பார்த்த தலைவர்கள் வேறு. இன்று நாடகமாடும் அரசியல் தலைவர்கள் வேறு.அன்று மானுட நிஜங்களுக்கு தலைவர்கள் போராடினார்கள். இன்றோ அரசியல் பூபங்கதில் ஆசையால் கற்பத்தை கலைத்தாவது அரசியல் நடத்தியே அவேன் என்ற கூட்டம்தான் அதிகம் உள்ளது.

கடந்த கால சிலாங்கூர் மாநில அரசியல் முதல்வர்களில் காலீத் இல்லை. காலீத் ஒரு நிர்வாக் முதல்வர். இதுகாலம் இருந்தவர்களை காட்டிலும் அதிகம் படித்தவர் ,சுய பணக்காரர் , பாவம் பார்க்கும் மனம் இருந்தாலும் சட்டமும் கடமையும் முந்தி நிற்பதை காணமுடித்தது.

இன்று அவரின் பார்வையில் வாங்கி வாழ்ந்தவர்கள் கூட வெக்கமிலாமல் எதிர் மறை சேதி விடுகின்றனர். அதில் சமுதாய பிரதிகள் ,நகல்கள் என்ற திமிரில் வாலும் தெரியாமல் தலையும் தெரியாமல் வெறும் அரசியல் மெச்சிக்க செய்தி விடுவதால் ஒரு இனத்தின் பெயர் கெடும் என்ற உணர்வு கூட தெரியாமல் பிரபலம் விரும்பி வ்சிதிரர்களை எங்கு வைப்பது ?

குற்றம் காண்பதில் திடீர் ஞானதோய புத்தி வந்துவிடும் வீணர்கள் அடக்கி வாசித்து காலம் வரும்வரை காத்திருப்பது அரசியல் புத்திசாலிதனம் என்பேன். அரசியலால் மானுட பெருமைகள் அழியும் என்றால் அரசியல் மனிதர்கள் பிறக்காமலே இருக்கலாம்.

-பொன் ரங்கன்