சமயத்தைக் காட்டி பெண்கள் தலைவராவதைத் தடுக்காதீர்

nurulபிகேஆர்  உதவித்  தலைவராக  மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  நுருல்  இஸ்ஸா  அன்வார், அரசியலில்  மகளிர்  மறுமலர்ச்சி  தேவை  என்று  கூறியுள்ளார்.

“பெண்கள்  தலைவர்கள்  ஆவது  அந்நியமானது, கூடாத  செயல் என்று நினைப்போர்  இருக்கத்தான்  செய்கிறார்கள்.

“அதைவிட  மோசமாக  சிலர்,  சமய  வாதங்களை  முன்னிறுத்தி  பெண்கள்  தலைவர்களாவதைத்  தடுக்க முனைகிறார்கள்”  என இன்று  காலை  பிகேஆர்  மகளிர்  மாநாட்டைத்  தொடக்கி  வைக்கையில்  நுருல்  இஸ்ஸா   கூறினார்.

பிகேஆர்,  அதன்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலை  சிலாங்கூர்  மந்திரி  புசாராக்கும்  முயற்சியில்  ஈடுபட்டிருப்பதும்  அதற்கு  பாஸ்  உள்பட  பல  தரப்பினரின்  எதிர்ப்பு  தெரிவிப்பதும்  தெரிந்ததே. இந்நிலையில்  நுருல்  இஸ்ஸா  இவ்வாறு  பேசியுள்ளார்.