வான் அசிசா எம்பி ஆவதற்கு சுல்தானின் விருப்பம் தடையாகுமா?

sulபிகேஆர்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர்  எம்பி  ஆவதற்கு  எஞ்சியுள்ள ஒரே  தடை  அரண்மனைதான். சுல்தான் ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா-வின் அங்கீகாரம்  கிடைத்தால்  அவர்  எம்பி  ஆகி  விடலாம். சுல்தானின்  அனுமதி  கிடைக்குமா?

இதை மலேசியாகினி  வான்  அசிசாவிடம்  கேட்டதற்கு,  சுல்தானுக்கென  சொந்த  “விருப்பங்கள்”  இருக்கலாம்  என்பதை  அவர்  ஒப்புக்கொண்டார்.

என்றாலும், சுல்தானின்  விருப்பம்  குறித்து  எந்த  ஒரு  அனுமானத்துக்கும்  வர  அவர் தயாராக  இல்லை.

“நம்  மாநிலத்துக்கு  ஓர்  ஆட்சியாளர்  இருக்கிறார். அவர்  நன்கு  கல்வி  கற்றவர். அவருக்கென  விருப்பங்கள்  இருக்கும்  என  நினைக்கிறேன்.

“அரசமைப்பின்படி   பெரும்பான்மை இடங்கள்  வைத்திருப்பவரே  மாநிலத்தில்  ஆட்சி  அமைக்க  வேண்டும். இதையும்  துவாங்கு  கவனத்தில்  கொள்ள வெண்டியிருக்கும்”,என  வான்  அசிசா  கூறினார்.

அசிசா எம்பி  ஆவதில்  சுல்தானுக்கு  விருப்பமில்லை  என்று  கூறப்படுவது  பற்றி  வினவியதற்கு,  அவ்விவகாரம்  பற்ரி  சுல்தானைச்  சந்திக்க இன்னும்  வாய்ப்பு  கிடைக்கவில்லை  என்றார். மேலும், சுல்தான்  வெளிப்படையாக  அப்படி  எதுவும்  சொல்லவில்லை  என்பதையும்  அவர்  சுட்டிக்காட்டினார்.