பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்பி வேட்பாளராக நியமனம் செய்யப்பட மாட்டார்கள்

mustafaபிகேஆரும்  டிஏபியும் சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  பிகேஆர்  தலைவர் டாக்டர்  வான்  அசிசா வான் இஸ்மாயிலை மட்டுமே  நியமனம்  செய்துள்ள  வேளையில் பாஸ் அதன்  வேட்பாளர்கள் குறித்து  இன்னும்  முடிவு  செய்யவில்லை.

“அரண்மனையிலிருந்து  கடிதம் இன்னும் வரவில்லை, விரைவில்  வரலாம்”, என  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலி  கூறினார்.

கடிதத்தைப் பார்த்த  பின்னரே  முடிவு  செய்யப்படும்  என  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

பாஸ், கட்சி ஆள்களை  எம்பி  பதவிக்குப்  பரிந்துரைக்குமா  என்று  வினவியதற்கு, “இப்போதைக்கு பாஸ்  கட்சியைச்  சேர்ந்தவர்களை (எம்பி  வேட்பாளராக) நியமிப்பதில்லை  என்பதுதான்  எங்கள்  நிலைப்பாடு”, என்றாரவர்.