அன்வார்: என் மனைவி என்பதற்காக அசிசா தேர்ந்தெடுக்கப்படவில்லை

wanசிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கான  வேட்பாளராக  டாக்டர்  வான் அசிசா  வான்  இஸ்மாயில்  தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு  அவர் தம்  மனைவி என்பது  காரணமல்ல  என்கிறார்  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்.

தம்  மனைவி  எம்பி  வேட்பாளராக  பெயர்  குறிப்பிடப்படிருப்பதை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒரு  அரசியல்  சர்ச்சையாக்கி,   குடும்பத்தினருக்குச்  சலுகை  செய்வதாக  கூறியிருப்பது  வியப்பூட்டுவதாக  அன்வார்  கூறினார்.

“கட்சி  வான் அசிசாவை  நியமனம்  செய்திருக்கிறது  என்றால்  அதற்கு  அவர்  என் மனைவி  என்பது  காரணமல்ல. அவர்  கட்சியின்  தலைவர், மலேசிய  நாடாளுமன்றத்தில்  எதிரணி  தலைவராக  இருந்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது”, என்றார்.