பிகேஆர்: சுல்தானை “கட்டாயப்படுத்த” பாஸ் முன்பு தயங்கவில்லை!

PKR - Pas forcing sultanசிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்ப பாஸ் எடுத்துள்ள முடிவிற்கு அது அளித்துள்ள காரணத்தை பிகேஆர் நிராகரித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஒரே ஒரு பெயரை மட்டும் சமர்ப்பிக்கையில் அவருக்கு மனசாட்சிக்குத்தல் ஏதும் இல்லை என்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியன் சுட்டிக் காட்டினார். “சுல்தான் நான்கு பெயர்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்த போதிலும், இது நடந்தது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார். சுல்தான் கேட்டுக்கொண்டவாறு ஒன்றுக்கும் கூடுதலான பெயரை சமர்ப்பிக்காதது அரண்மனையை “கட்டாயப்படுத்துவது” என்று கருதப்படும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி வாதிட்டார். மந்திரி புசார் பதவிக்கு வான் அஸிசாவை மட்டுமே முன்மொழிய வேண்டும் என்று ஆகஸ்ட் 17 இல் பக்கத்தான் தலைமைத்துவ மன்றம் எடுத்திருந்த முடிவுக்கு ஏற்ப பாஸ் நடந்து கொள்ளுமாறு அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டதற்கு எதிர்வினையாற்றிய முஸ்தாபா அலி மேற்கண்டவாறு கூறினார்.