நிக் நஸ்மி: பாஸுக்கு நன்றி, ஆனால் எனக்கு எம்பி பதவி வேண்டாம்

nikபிகேஆர்  இளைஞர்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்,  பாஸ்  அவரை  சிலாங்கூர்  மந்திரி  புசாராக  நியமனம்  செய்ய  விரும்புவதற்கு  நன்றி  தெரிவித்துக் கொண்டார். ஆனால், தம்  ஆதரவு  கட்சித்  தலைவருக்குத்தான்  என்றாரவர்.

“சிலாங்கூர்  மந்திரி  புசார்  பதவிக்கு  என்  பெயரைப்  பரிந்துரைத்த  பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்சான்  காயாட்டுக்கு  நன்றி  தெரிவித்துக்  கொள்கிறேன்.

“ஆனால், என் ஆதரவு  முழுக்க   முழுக்க  பிகேஆர்  முடிவு  செய்துள்ள  வேட்பாளருக்குத்தான்….அதாவது  எங்கள்  தலைவருக்குத்தான்”, என்று  நிக்  நஸ்மி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.