பெங்காலான் குபோரில் செப்டமர் 25-இல் தேர்தல்

pengபெங்காலான்  குபோர்  இடைத்  தேர்தல்  செப்டம்பர்  25-இல்  நடைபெறும்  எனத்  தேர்தல்  ஆணையம் (இசி)  இன்று  அறிவித்தது.

வேட்பு  மனு தாக்கல்  செய்யும்  நாள்  செப்டம்பர்  13.  தேர்தல்  பரப்புரைக்கு  12  நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தொகுதியின்  சட்டமன்ற  உறுப்பினர்  நூர்  ஜஹிடி  ஒமார்  ஆகஸ்ட்  20-இல்  காலமானதை  அடுத்து  இந்த  இடைத்  தேர்தல்  நடைபெறுகிறது.