சிலாங்கூர் பாஸ்: எம்பி பதவிக்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை

commisசிலாங்கூர் மந்திரி  புசார்  பதவிக்குச் சிலரின்  பெயர்களை கட்சியின் தலைமைக்குத்  தான் பரிந்துரைத்ததாகக்  கூறப்படுவதை  சிலாங்கூர்  பாஸ் மறுத்துள்ளது.

சிலாங்கூர்  பாஸ், கட்சியின்  மத்திய  தலைமைக்கு  நான்கு  பெயர்களை  அனுப்பி  வைத்ததாகவும்  பாஸ்  பிரதிநிதி  ஒருவரையும்  மந்திரி  புசார்  பதவிக்கு  நியமனம்  செய்யுமாறு  கேட்டுக்கொண்டதாகவும்  உத்துசான் மலேசியாவில்   வெளிவந்த செய்தியை  சிலாங்கூர்  பாஸ்  ஆணையர்  இஸ்கந்தர்  அப்துல்  சமட் மறுத்தார்.

“சிலாங்கூர்  பாஸ்  மந்திரி  புசார்  பதவிக்கு  யாருடைய  பெயரையும் பரிந்துரைக்கவில்லை”, என இஸ்கண்டர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

சிலாங்கூர்  அரண்மனைக்கு  அனுப்பும்  பெயர்களை  பாஸின்   தலைமைத்துவம்தான்  முடிவு  செய்யும். அது என்ன  முடிவெடுத்தாலும்  மாநில  பாஸ்  ஆதரிக்கும்  என்றாரவர்.