தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது ‘நீதிமன்ற விவகாரம்’ என்கிறது புத்ராஜெயா

pmo1எதிரணித்  தலைவர்கள்மீது  அடுத்தடுத்து  தேச நிந்தனைக் குற்றம்  சாட்டப்படுவது  நீதிமன்றம்  சம்பந்தப்பட்ட  விவகாரம் என்றும்  அதற்கும்  அரசாங்கத்துக்கும்  சம்பந்தமில்லை என்றும்  பிரதமர்துறை  அலுவலகம்  இன்று  கூறியது.

“தேச  நிந்தனைச் சட்டத்தின்கீழ்  குற்றம்  சாட்டுவதை  நீதிமன்றங்கள்  தீர்மானிக்கின்றன.  மலேசிய  நீதித்துறை சுயேச்சையாக  செயல்படுவது.  அது பல  வழக்குகளில்  அளித்த  தீர்ப்பே  இதற்குச்  சான்று” எனCharged unders sedition act  அது  ஓர் அறிக்கையில்  கூறியது.

தேசிய  நிந்தனைச்  சட்டம் பரவலாக  பயன்படுத்தப்பட்டாலும் அதை  அகற்றிவிட்டு  அதனிடத்தில்  தேசிய  நல்லிணக்கச்  சட்டம்  கொண்டுவரப்படுவது  உறுதி  என்றும்  அந்த  அறிக்கை  கூறியது.

“புதிய  சட்டம்  வரும்வரை, நடப்பில் உள்ள  சட்டங்களைத்தான் பயன்படுத்த  வேண்டியுள்ளது”, என்று  அது  கூறிற்று.