கிட் சியாங்: மெர்டேகா விளம்பரங்களில் காண்பதெல்லாம் வெறும் மாயை

limமலேசியா, உண்மையான  சுதந்திரம், வளப்பம், நல்லிணக்கம்  ஆகியவற்றை  அடைந்து  விட்டதாக  மெர்டேகா  விளம்பரங்களில்  காட்டப்படுவது  வெறும்  மாயை என்று  கூறும்  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங், அவற்றை  அடைய  இன்னும்  நீண்ட தூரம்  செல்ல  வேண்டும்  என்றார்.

“அந்த  விளம்பரங்கள் மலேசியர் வாழ்க்கையைப்  பற்றி  ஒரு  பொய்யான  தோற்றத்தை  உருவாக்கிக்  காட்டுகின்றன. உண்மையில்  இன, சமய, கலாச்சார  வேறுபாடுகளினால்  அச்சமும் சகிப்புத்தன்மையற்ற  ஒரு  சூழலும்தான்  நிலவுகிறது.

“57 ஆண்டுகளுக்குப்  பின்னரும்,  இனம், சமயம், அரசியல்சார்பு   ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்  நல்லிணக்கத்துடன்  வாழும்  ஒரு  சமுதாயத்தை  உருவாக்க  முடியாமல்  மலேசியா தடுமாறிக்  கொண்டிருக்கிறது”, என  லிம்  கூறினார்.