சரணடையுங்கள் இல்லையேல் வீடுதேடி வருவோம்: பிபிஎஸ்-ஸுக்கு ஐஜிபி எச்சரிக்கை

igpபினாங்கு  தன்னார்வ  காவல்  படையினர்(பிபிஎஸ்)  தாங்களே  வந்து  சரணடையாவிட்டால்  போலீஸ்  அவர்களின்  வீடுதேடி  வரும்  என  போலீஸ்படைத்  தலைவர்  காலிட்  அபு பக்கார்  இறுதி  எச்சரிக்கை  விடுத்திருக்கிறார்.

“நாங்கள்  அவர்களின்  வீடுதேடிச்  செல்லுமுன்னர்  அவர்களே  சரணடைவது  நல்லது”, என்றவர்  இன்று  டிவிட்டரில்  பதிவிட்டிருந்தார்.

இன்று  காலை  சுதந்திர  தின  அணிவகுப்புக்குப் பின்னர்  250  பிபிஎஸ் படையினர்  கைது  செய்யப்பட்டதை  அடுத்து  அவர்  இவ்வாறு  எச்சரித்திருந்தார்.

எந்தக்  குற்றச்சாட்டின்கீழ் போலீஸ்,  பிபிஎஸ்  படையினரைக்  கைது  செய்கிறது  எனத்  தெரியவில்லை.

ஆனால், இதற்குமுன் காலிட்,  பிபிஎஸ்  பதிவு  செய்யப்படாத  அமைப்பு  என்பதால்  அது  சட்டவிரோதமானது  என்று  கூறியிருந்தார்.

ஆனால்,  பினாங்கு  அரசு  அதை  நிராகரித்தது. பிபிஎஸ், கிராமக் குழுக்கள்  போன்றது  என்றும்  அதைப்  பதிவு  பண்ண  வேண்டிய  அவசியமில்லை  என்றும்  அது  கூறிற்று.