எபோலா நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு!

ebola_virus_africa_001தற்போது உலகின் பல்வேறு நாடுகளையும் உலுக்கி வரும் செய்தியாக எபோலா வைரஸ் தொற்று காணப்படுகின்றது.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த வைரஸ் ஆனது மனிதர்களில் மட்டுமன்றி குரங்குகளிலும் தொற்றுகின்றது.

தற்போது ZMapp எனும் புதிய மாத்திரையினைப் பயன்படுத்தி குரங்குகளில் காணப்பட்ட எபோலா வைரஸ் தொற்றுக்கு வெற்றிகரமாக நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை கூடத்தில் 18 குரங்களுக்கு இந்த மருந்து பலனளித்து அவை குணமடைந்துள்ளதாக கனடாவை சேர்ந்த பொது சுகாதார ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குழு தலைவர் கேரி கோபின்கர் கூறுகையில், எனது எதிர்பார்ப்பை மீறி மருந்து வேலை செய்து ஆச்சரியம் அளித்துவிட்டது என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

கனடா ஆய்வு கூடத்தில் எபோலா வைரஸ் செலுத்தப்பட்ட 18 குரங்குகள் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே மனிதர்களுக்கும் இந்த மருந்து வேலை செய்து உயிரை காப்பாற்றும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எபோலா ஆட்கொல்லி நோய்க்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.