ஒப்ஸ் லாலாங் போன்றதொரு இயக்கம் தொடங்கியுள்ளது

anwarஅரசாங்கம்  ஒபராசி  லாலாங்  போன்றதொரு  நடவடிக்கையைத்  தொடங்கியிருக்கிறது.  பினாங்கில்  தன்னாரவக்  காவல்  படையினர் (பிபிஎஸ்) 156 பேர்  கைது  செய்யப்பட்டிருப்பது இதைத் தெளிவாகக்  காண்பிக்கிறது  என  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறினார்.

1987-இல், டாக்டர்  மகாதிர்  ஆட்சியில்  ஒபராசி  லாலாங்  தொடங்கப்பட்டு 107பேர்  கைது  செய்யப்பட்டதுபோல்  இப்போதைய  நடவடிக்கையும்  மக்களை “அச்சுறுத்தும்  நோக்கம்”  கொண்டது  என்றாரவர்.

“நடப்பதைப்  பார்க்கையில்  அது  தெளிவாக  தெரிகிறது. கருத்துகளைத்  திறம்பட  எடுத்துச்சொல்வோர்மீது  நடவடிக்கை  எடுக்கப்படுகிறது”,  என  பிகேஆர் நடப்பில்  தலைவர்  கூறினார்.

இது  நாட்டுக்கும்  அரசாங்கத்துக்கும்  நல்லதல்ல  என்றாரவர்.