கிழக்கு யுக்ரெய்னின் ‘தேச அந்தஸ்து’ பற்றி பேச வேண்டும்’: புடின்

russia_putinகிழக்கு யுக்ரெய்னுக்குரிய ‘தேச அந்தஸ்து’ தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் தொடரும் மோதல்களுக்கு முடிவு காண்பதற்கான முயற்சிகளின் அங்கமாக இந்த பேச்சுக்கள் அமையவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கு யுக்ரெய்னில் வாழும் மக்களின் ‘சட்டபூர்வ நலன்களை’ பாதுகாக்க வேண்டும் என்றும் ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஆதரவு ஆயுததாரிகளுடன் யுக்ரெய்ன் நேரடி அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும் என்று ரஷ்யாவிடமிருந்து அழுத்தம் அதிகரித்துவருவதையே இந்த கோரிக்கை காட்டுவதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.

இந்த நடைமுறைக்கே ரஷ்யா தொடர்ந்தும் விரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

யுக்ரெய்னுக்கும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடப்பதற்கு ஒருநாள் உள்ள நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது. -BBC