இலங்கை தமிழர் பிரச்சினை! இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன?

modi_sampanthan_met_001

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இந்தியா அழைத்துப் பேச்சு நடத்­தி­யுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகி­றது? என்ற வினா, கொழும்பு அர­சியல் அரங்கில் எழுந்­தி­ருக்­கி­றது.

இரா.சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் குழு, புது­டில்­லிக்கு மேற்­கொண்ட பய­ணமும் சரி, அதன் போது இந்­தியத் தரப்பில் இருந்து வெளிப்­ப­டுத்­தப்­பட்ட கருத்­து­களும் சரி, அர­சாங்­கத்தை வெறுப்­ப­டைய வைத்­துள்­ளது என்­பதே உண்மை.

தமது கையை மீறி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இந்­தியா நடத்­தி­யுள்ள பேச்­சுக்­களை அர­சாங்­கத்­தினால் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. நரேந்­திர மோடி அர­சாங்கம், தமது பக்­கமே நிற்கும் என்ற அர­சாங்­கத்தின் மிகை­யான எதிர்­பார்ப்பே இந்த ஏமாற்­றத்­துக்­கான காரணம்.

அது­போ­லவே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்­புக்கு இந்­தியா கொடுத்­துள்ள முக்­கி­யத்­து­வமும், இனப்­பி­ரச்­சினைத் தீர்வு தொடர்­பாக இந்­தியா கொண்­டுள்ள நிலைப்­பாடும், இலங்கை அர­சாங்­கத்­துக்கு விச­னத்தை எற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

13வது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் தாம் கொண்­டுள்ள உறு­திப்­பாட்டை இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மீண்டும் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

அது­மட்­டு­மன்றி, 13வது திருத்­தச்­சட்­டத்­துக்கு அப்பால் சென்று, தமிழர் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான, கௌர­வ­மான, அர­சியல் தீர்வு ஒன்று காணப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இந்­தியா உறு­தி­யாக இருப்­ப­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

சம்­பந்­தப்­பட்ட தரப்­புகள் பேச்­சுக்­களின் மூலம் நிரந்­தர அர­சியல் தீர்­வுக்கு முயற்­சிக்க வேண்டும் என்­ப­தையும் நரேந்­திர மோடி வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.

13வது திருத்­தச்­சட்­டத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்ற பேச்­சுக்கே இட­மில்லை என்று இலங்கை அர­சாங்கம் அடம்­பி­டித்து வரு­கின்ற நிலையில் தான், மோடியின் இந்த நிலைப்­பாடும் வெளிப்­பட்­டுள்­ளது.

மாகா­ண­ச­பை­க­ளுக்கு, பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என்ற அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு, இந்­தி­யா­வையும் சிக்­க­லுக்குள் தள்­ளி­விட்­டுள்­ளது.

13வது திருத்­தச்­சட்­டத்தின் அதி­கா­ரங்கள் இன்று கொஞ்சம் கொஞ்­ச­மாக அர­சாங்­கத்­தினால் பிடுங்­கி­யெ­டுக்­கப்­பட்டு விட்­டன.

காணி, பொலிஸ், நிதி அதி­கா­ரங்கள் எது­வு­மில்லை. இருக்­கின்ற அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வதில் கூட, மத்­திய அரசின் இடை­யூ­றுகள் உள்­ளன.

வடக்கு மாகா­ண­சபை தெரிவு செய்­யப்­பட்டு கிட்­டத்­தட்ட ஒரு ஆண்டு ஆகப் போகின்ற நிலை­யிலும், அதனால் சுய­மாக இயங்க முடி­யாத நிலையே உள்­ளது.

அனைத்துத் தரப்­பி­ன­ரதும் நம்­ப­கத்­துக்­கு­ரி­ய­வ­ராக இருந்த போதும், உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ய­ர­ச­ராகப் பதவி வகித்த போதும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரால், மாகா­ண­ச­பையை கொண்டு நடத்த முடி­ய­வில்லை.

மாகா­ண­ச­பைக்குத் தேர்­தலை நடத்தி ஆட்­சியை பிடிக்க விட்ட அர­சாங்கம், அந்த ஆட்­சியைக் கொண்டு நடத்தும் அதி­கா­ரத்தை, ஆளுநர் என்ற கடி­வா­ளத்தைக் கொண்டு இழுத்துப் பறிக்­கி­றது.

அது­போ­தா­தென்று, அரச அதி­கா­ரி­களைக் கைக்குள் வைத்துக் கொண்டு மாகா­ண ­ச­பையை இயங்க விடாமல் தடுத்து வரு­கி­றது. வடக்கு மாகா­ண­ச­பையில் நிறை­வேற்­றப்­பட்ட முத­ல­மைச்சர் நிதிய நிய­திச்­சட்­டத்­துக்கு ஒப்­புதல் அளிக்க ஆளுநர் மறுத்­தி­ருக்­கிறார். இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்கள் கூறப்­ப­டு­கின்­றன.

அதே­வேளை, இது­போன்ற முத­ல­மைச்சர் நிதியம், ஊவா, தென், சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் ஏற்­க­னவே செயற்­ப­டு­கி­றது. ஆக, வடக்கு மாகா­ண­ச­பைக்­கான அதி­கா­ரங்­களைப் பறித்து அதனை முடக்­கு­வது குறித்தே அர­சாங்கம் எப்­போதும் சிந்­தித்து வரு­கி­றது.

வடக்கு மாகா­ணத்­துக்கு சிவில் ஆளுநர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டு­மென்று மாகா­ண­சபை கோரு­கி­றது. அதற்கு இணக்கம் தெரி­வித்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச அந்த வாக்­கு­று­தி­யையும் கூட நிறை­வேற்­ற­வில்லை.

வடக்கு மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்­து­வதில் இந்­தி­யாவே முக்­கிய பங்­காற்­றி­யது.  ஆனால், வடக்கு மாகா­ண­சபை சுமு­க­மாகச் செயற்­பட வைப்­பதில் இந்­தியா இது­வரை பங்­காற்­ற­வில்லை.

இது­கு­றித்தும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இந்­தியப் பிர­த­ம­ரிடம் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.  இதை­ய­டுத்து, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை அழைத்துப் பேசு­வ­தாக அவர் வாக்­கு­றுதி அளித்­துள்ளார். இது அர­சாங்­கத்­துக்கு இன்­னமும் சிக்­கலை ஏற்­ப­டுத்தும்.

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் மீது அழுத்­தங்­களைக் கொடுத்து. அவரைச் செயற்­பட முடி­யாமல் தடுக்கும் போது, அலரி மாளி­கையின் கத­வு­களைத் தட்­டுவார் என்றே அர­சாங்கம் எதிர்­பார்த்­தது.

ஆனால், அலரி மாளி­கையில் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளுக்கு பெறு­ம­தி­யில்லை என்­பதை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் உணர்ந்து கொண்­டுள்­ளதால், அவர் அலரி மாளி­கையின் வாச­லையே எட்­டிப்­பார்க்க முனை­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது.

இந்­த­நி­லையில், மாகா­ண­ச­பையைக் கொண்டு நடத்­து­வதில் தனக்­குள்ள பிரச்­சி­னை­களை, இந்­தியப் பிர­த­ம­ரிடம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன் வைக்கும் சூழ்­நிலை ஏற்­பட்டால், அது அர­சாங்­கத்­துக்கே அவ­மானம்.
என்­றாலும் அத்­த­கைய சூழலை உரு­வாக்கிக் கொடுத்­தது அர­சாங்­க­மே­யாகும்.

கொடுத்த வாக்­கு­று­தி­களைக் காப்­பாற்­றாமல், வடக்கு மாகா­ண­ச­பையின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­யது அர­சாங்­கமே.

இதற்­கி­டையே, நேரடிப் பேச்­சுக்கள் குறித்து இந்­தியப் பிர­தமர் வலி­யு­றுத்­தி­யி­ருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் சில புத்­தி­சா­து­ரி­ய­மான நகர்­வு­களை மேற்­கொண்­டுள்­ள­தாகத் தெரி­கி­றது.

நேரடிப் பேச்­சுக்­களில் இந்­தியா- கண்­கா­ணிப்­பா­ள­ரா­க­வேனும் பங்­கேற்க வேண்டும் என்­பது கூட்­ட­மைப்பு முன்­வைத்த முத­லா­வது கோரிக்கை.

அடுத்து, இலங்கைப் பிரச்­சி­னையைத் தீர்த்து வைக்கும் முயற்­சி­க­ளுக்­காக இந்­திய அர­சாங்கம் சிறப்புப் பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மிக்க வேண்டும் என்­பது இரண்­டா­வது கோரிக்கை.

அர­சாங்­கத்­து­ட­னான பேச்­சுக்­களில், இந்­தியா எந்த வகை­யி­லா­வது பங்­கேற்க வேண்டும் என்ற ஒரு சூழலை உரு­வாக்கும் போது, இந்­தி­யா­வுக்­கான பொறுப்பு அதி­க­ரிக்கும். அதா­வது, பேச்­சுக்­களில் எந்தத் தரப்பு தவ­றி­ழைக்­கி­றது என்­பதை இந்­தியா உணர்ந்து கொள்ளும்.

அர­சாங்­கத்தின், முகத்­தி­ரையைக் கிழிப்­ப­தற்கு,  இந்­தி­யாவின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு இது உத­வி­யாக அமையும் என்று கூட்­ட­மைப்பு எதிர்­பார்ப்­ப­தாகத் தெரி­கி­றது.

மேலும், ஜி.பார்த்­த­சா­ரதி போல, சிறப்புப் பிர­தி­நிதி ஒரு­வரை நிய­மித்து, இனப்­பி­ரச்­சினைத் தீர்வில் இந்­தி­யாவின் பங்கை அதி­க­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கையும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

நரேந்­திர மோடி அர­சாங்கம் பத­விக்கு வந்த சில நாட்­க­ளி­லேயே இது­கு­றித்து பேச்­சுக்கள் அடிப்­பட்­டன. ஆனால், அப்­போது, அந்த விவ­கா­ரத்தை புது­டில்லி கருத்தில் கொண்­ட­தா­கவே தெரி­ய­வில்லை.

இந்­தியப் பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த இந்த யோச­னையை இந்­தியா நிரா­க­ரித்து விட்­ட­தா­கவும், அது­பற்றி நரேந்­திர மோடி எந்தக் கருத்­தையும் வெளி­யி­ட­வில்லை என்றும் கொழும்பு ஆங்­கில நாளிதழ் ஒன்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்த இந்தக் கோரிக்­கையை, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி ஏற்றுக் கொண்­ட­தா­கவும், அதை­விட, கொழும்­பி­லுள்ள இந்­தியத் தூது­வ­ருக்கு கூடுதல் அதி­கா­ரங்­களை வழங்கி இந்த முயற்­சியில் ஈடு­ப­டுத்­தலாம் என்று அவர் யோசனை கூறி­ய­தா­கவும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

ஏற்­க­னவே, விசேட தூதுவர் ஒரு­வரை இந்­தியா நிய­மிக்­கலாம் என்ற கதை பர­விய போதே, அர­சாங்கம் அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தது.

ஆனால், கொழும்­பி­லுள்ள தூது­வ­ருக்கு இந்­தியா கூடுதல் பொறுப்­பு­க­ளையும் அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கும் ­போது, அதனை இலங்கை அர­சாங்­கத்­தினால் தடுக்­கவும் முடி­யாது, எதிர்க்­கவும் முடி­யாது.

இது ஓர் இரா­ஜ­தந்­திர ரீதி­யான நட­வ­டிக்­கை­யா­கவும் இருக்கும். அதே­வேளை, இலங்கை அர­சாங்­கத்­துக்கு கொடுக்­கப்­படும் அழுத்­த­மா­கவும் அமையும்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி, இலங்கை அர­சாங்­கத்­துக்கும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் நேரடிப் பேச்­சுக்கள் நடத்­தப்­பட வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, தெரி­வுக்­கு­ழுவில் தான் தீர்வு எதைப் பற்­றியும் பேச முடியும் என்று அடம்­பி­டிக்­கி­றது அர­சாங்கம். தெரி­வுக்­கு­ழு­வுக்கு செல்­லாமல் இருப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள கார­ணங்­களை இந்­தியா அன்றும் ஏற்­றது, இன்றும் ஏற்­றுள்­ளது.

இதுவும் இலங்கை அர­சுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள ஒரு சவால்தான்.

இலங்கை அர­சாங்கம் பல விட­யங்­களில் முரண்டு பிடித்­தாலும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் பேசியே ஆக வேண்­டு­மென்ற ஒரு சூழலை இந்­தியா உரு­வாக்கி வரு­வ­தாகத் தெரி­கி­றது.

இதனை அர­சாங்கம் தட்டிக் கழிப்­பது புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வாக இருக்­காது.

எனவே தான், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரினால், நேரடிப் பேச்­சுக்­க­ளுக்கு அர­சாங்கம் தயா­ராக இருப்­ப­தாக அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் அறி­வித்­துள்ளார்.

அதே­வேளை, நேரடிப் பேச்­சுக்கு கூட்­ட­மைப்பு அழைப்பு விட­வில்லை என்று அர­சாங்கம் கூறு­வது நகைப்­புக்­கி­ட­மா­னது என்றும், எவ்­வா­றா­யினும், அர­சுடன் பேசத் தாம் தயார் என்றும் அறி­வித்­தி­ருக்­கிறார் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன்.

அர­சாங்­கத்­துக்கு புற அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலை­யிலும், இந்தியாவினது அணுகுமுறைகளாலும், விரைவிலேயே கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசும் முடிவுக்கு அரசாங்கம் செல்லக் கூடும்.  ஆனால் அதில் அரசாங்கம் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று கூற முடியாது.

ஆனால் ஒப்புக்காக ஒரு பேச்சு மேசையை அரசாங்கம் உருவாக்கிக் கொள்ளலாம்.  அத்தகைய நிலை ஒன்றில் தான், இந்தியாவையும் பங்காளியாக்க கூட்டமைப்பு முயன்றிருக்கிறது.  இது எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியம் என்று தெரியவில்லை.

ஆனால், இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுடனேயே இலங்கை அரசாங்கம் விளையாட ஆரம்பித்து விட்ட பின்னர், இந்தியாவும் தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கான சில எத்தனங்களை மேற்கொள்ள முனையலாம்.

அதுவும், மோடி போன்றதொரு உறுதியான தலைவரின் கீழ் உள்ள இந்தியாவுக்கு, அத்தகைய முயற்சி இன்னும் வலுச் சேர்க்கும்.

இந்தநிலையில் தான், இந்தியா எடுத்துள்ள நகர்வுகள் கொழும்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளன.

இந்தநிலையில் அடுத்த கட்டம் எவ்வாறு அமையும் என்பது எதிர்பார்ப்புமிக்க கேள்வியாக எழுந்து நிற்கிறது.

– சத்ரியன்

TAGS: