இலக்கை அடைய இந்தியா உறுதுணையாக இருக்கும்!- நாடு திரும்பிய சம்பந்தன் எம்.பி. நம்பிக்கை

sambanthanதமி­ழர்கள் சுய­ம­ரி­யா­தை­யுடன் நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களைப் பெற்று கௌர­வ­மாக வாழ்­வ­தற்­கு­ரிய இலக்கை அடை­வ­தற்கு இந்­தியா உறு­து­ணை­யாக இருக்கும் என தெரி­வித்­துள்ள தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், இந்­தியப் பயணம் திருப்­தி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­துள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து நேற்­றைய தினம் நாடு திரும்­பிய இரா.சம்­பந்தன் இந்­தி­யா­வுக்­கான தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் உத்­தி­யோக பூர்வ விஜயம் தொடர்­பாக கருத்து வெளியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியி­டு­கையில்,

இந்­தி­யாவின் மத்­தியில் புதிய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­ததும் அவர்­க­ளை நேர­டி­யாகச் சந்­தித்து தமிழ் மக்கள் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு எமது விருப்­பத்தை வெளியிட்­டி­ருந்தோம்.

அதன் பிர­காரம் புதிய பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் நாம் உத்­தி­யோக பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு அங்கு சென்­றி­ருந்தோம்.

அங்கு நாம் இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிவி­வ­கார செய­லாளர், உதவி வெளிவி­வ­கார செய­லாளர், தேசிய பாது­காப்பு ஆலோ­சகர், முன்னாள் பிர­தமர் கலா­நிதி மன்­மோகன் சிங், ஆகி­யோ­ருடன் தனித்­த­னி­யாக விரி­வான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்டோம். தொடர்ந்து பிர­தமர் நரேந்­திர மோடியைச் சந்­தி­தி­ருந்தோம்.

யுத்தம் நிறை­வ­டைந்து ஐந்து வரு­டங்­க­ளா­கின்ற நிலை­யிலும் தமிழ்ர்கள் பல்­வேறு நெருக்­கடி நிலை­மை­களை அன்­றாடம் சந்­தித்து வரு­கின்­றனர். குறிப்­பாக தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் கைய­கப்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் வேக­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. குடிப்­ப­ரம்­பலை மாற்றும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாத நிலையில் மக்கள் இன்­னமும் இருக்­கின்­றார்கள். உயர்­பா­து­காப்பு வலங்கள் அகற்­றப்­ப­டா­தி­ருப்­ப­துடன் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான சூழ்­நி­லை­க­ளுக்குள் வாழும் தமிழ் மக்­க­ளுக்­கான இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­க­ப­ட­வில்லை என்­பதை எடுத்துக் கூறி அவை தொடர்பில் பல்­வேறு கோணங்­களில் ஆராய்­தி­ருந்தோம்.

அதன் பின்னர் எமது விஜ­யத்தின் நீட்­சி­யாக தமிழ்­நாட்­டிற்கும் சென்­றி­ருந்தோம். அங்கு பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமி­ழிசை சௌந்­தர்­ராஜன், செய­லாளர் வானதி சீனி­வாசன், மத்­திய இணை அமைச்சர் பொன்.இரா­தா­கி­ருஷ்ணன், இல.கணேசன் உள்­ளிட்ட 12முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்­றையும் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் மேற்­கண்ட விட­யங்கள் தொடர்­பாக தெளிவாக ஆராய்ந்­து அவர்­களின் நிலைப்­பா­டு­க­ளையும் அறிந்­து­கொண்டோம்.

ஒட்­டு­மொத்­த­மாக பார்க்­கையில் எமது இந்­திய விஜ­ய­மா­னது திருப்­தி­க­ர­மான ஆரம்­ப­மாக அமைந்­துள்­ளது. அத்­துடன் தமி­ழர்கள் கௌர­வ­மாக சுய­ம­ரி­யா­தை­யுடன் நியா­ய­பூர்­வ­மான அபி­லா­ஷை­களை பெறும் இலக்கை அடை­வ­தற்கு இந்­தியா தொடர்ந்தும் உறு­து­ணை­யாக இருப்­ப­தோடு அதற்­காக தம்­மா­லான நட­வ­டிக்­கை­களை எடுப்போம் எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

அவர்­களின் நிலைப்­பாடு அவ்­வா­றி­ருக்­கின்ற நிலையில் தொடர்ச்­சி­யாக நாம் பக்­கு­வ­மாகச் செயற்­பட்டு அந்தக் கரு­மங்கள் வெற்­றி­ய­டை­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன என்றார்.

TAGS: