நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் செல்வோம்: அமைச்சருக்கு பாஸ் இளைஞர்கள் பதிலடி

suhaiபாஸ் தன்னார்வப்  படையான  யுனிட்  அமாலுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்பட்டால்  நீதிமன்றம்  செல்வோம்  என பாஸ்  இளைஞர்  தலைவர்  சுஹாய்ஸான்  காயாட்  சூளுரைத்தார்.

பாஸின் யுனிட்  அமால்-மீதும்  போலீசார்  நடவடிக்கை  எடுப்பது “நிச்சயம்”  என உள்துறை  அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறியதற்கு  சுஹாய்சான்  இவ்வாறு  எதிர்வினையாற்றினார்.

யுனிட்  அமால் பொதுநலம்  பேணும் ஓர்  அமைப்பு.

“அப்படி  இருக்க யுனிட்  அமாலுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படுவது  ஏன்  என்பது  எனக்குப்  புரியவில்லை”, என்றாரவர்.