அசிஸ் பாரி: 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படி அஸிசாவை எம்பியாக சுல்தான் நியமித்தே ஆக வேண்டும்

 

Selangor sultanசிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மந்திரி புசாராக வான் அஸிஸா வான் இஸ்மயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், ஏனென்றால் 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை, அப்போது சுல்தானாக இருந்தார், கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இவருக்கு உண்டு.

அரசமைப்பு கோட்பாடுகள் பிரகடனம் என்ற ஆவணத்தில் ஆறு சுல்தான்கள் கையொப்பமிட்டுள்ளனர். அப்பிரகடனப்படி சுல்தான்கள் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றுவர் என்பதும் ஒப்புக்கொண்டவைகளில் ஒன்றாகும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர்Selangor sultan1 அப்துல் அசிஸ் பாரி இன்று கூறினார்.

இதன்படி, தற்போதைய சுல்தான் மந்திரி புசார் வேட்பாளராக அதிகப்படியான பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்த இயலாமல் “போகலாம்” என்றாரவர்.

“அதன் உள்ளடங்கள் ஆட்சியாளர்களை இன்றுவரையில் கட்டுப்படுத்துகிறது. அது சட்டப்படி அமலாக்கப்படக்கூடியது இல்லை என்றாலும் அதனைப் புறக்கணிப்பது நன்னெறிக்கு முரணானது என்பதால் அது ஆட்சியாளர்களுக்கு தர்மசங்கடமான நிலையை உண்டுபண்ணும்”, என்று அசிஸ் மேலும் கூறினார்.

“ஆகவே, (வான் அஸிசாவை) சுல்தான் நியமித்தாக வேண்டும். அவரை நியகிக்க மறுப்பது ஒரு புறமிருக்க, அதிகப்படியான பெயர்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோருவது 1992 ஆம் ஆண்டு பிரகடனத்திற்கு, முக்கியமாக அரசமைப்புச் சட்டத்திற்கே, முரணானதாகும்”, என்பதை அசிஸ் வலியுறுத்தினார்.