ஸைட் கேட்கிறார்: ஸாஹிட்டின் “புனிதமான நான்கு” விவகாரங்கள் குறித்த குற்றங்களின் கூறுகள் என்னவோ?

 

Hamidi-Social contract2உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் குறிப்பிட்டுள்ள நான்கு புனிதமான விவகாரங்கள் பற்றிய துள்ளியமான சட்டங்கள் மற்றும் தடையுத்தரவுகள் இல்லை என்றால், அவற்றைப் பற்றி பேசும் மலேசியர்களை தண்டிப்பது நியாயமற்றதாகும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.

தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் நிரம்பி வழியும் இந்நேரத்தில், அதனைப் பொருட்படுத்தாமல் தென்னாப்பிரிக்காவுடன் மலேசியவை ஒப்பிட்ட அவர், தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கீடு முறை மலேசியாவின் நிலைமையைவிட சிறப்பானது ஏனென்றால் அங்கு சட்டங்கள் தெளிவாக இருந்தன என்றார்.

“சில தினங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் பேசியதை நீங்கள் கவனமாக கேட்டிருந்தீர்களானால், அவர் நான்கு புனித விவகாரங்களை ஒன்று சேர்த்து அவற்றை சமூக ஒப்பந்தம் என்று கூறி அவற்றை மீறுவது குற்றம் என்றார். அவரது பேச்சு உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் ஏனென்றால் அந்த நான்கு புனித விவகாரங்களில் குற்றம் என்பதை திட்டவட்டமாக உருவாக்குபவைகள் யாவை என்பது தெளிவாக்கப்படவில்லை.

 

நான்கு புனித விவகாரங்கள்

 

“அம்னோ கிடைக்கக்கூடிய அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தி அவை குறித்து கேள்வி கேட்போரை தண்டிக்கும், அமைச்சர் அலறினார்”, என்று ஸைட் அவரது இணைய தளத்தில் இன்று இடுகை செய்துள்ளார்.

பகசா மலேசிய பற்றி கூறிய ஸைட் இப்ராகிம், நியாயமான மலேசியர்கள் எவரும் தேசிய மொழிக்கு எதிராக இல்லை என்று குறிப்பிட்டார்.Zaid - Good Muslim

“அது அமைச்சரின் மனதில் மட்டும் இருப்பது சாத்தியமே. செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் ஆங்கிலத்தில் பேசினால் (அதை அவர் விரும்புகிறார்), அவர் தேசிய மொழியை அவமதிக்கிறார் என்றாகுமா?

“மொழியை ஒருவர் “எதிர்க்கவில்லை” என்று கருதப்படுவதற்கு ஒவ்வொரு மலேசியரும் குறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு தடவையாவது பகசா மலேசியாவில் பேசித்தான் ஆக வேண்டுமா? எது குற்றத்தை உருவாக்கும் கூறுகள் என்பதைத் தெளிவு படுத்துவதற்கு நாம் சட்டங்களை இயற்றி இருக்க வேண்டும்.

“இல்லை என்றால், அம்னோ நினைத்தவரை எல்லாம் மொழிக்கு விசுவாசமாக இல்லை அல்லது அதற்கு எதிராக இருக்கிறார் என்று கூற இயலும். வேறு வகையில் கூறினால், நிலைமை (தென்னாப்பிரிக்க)  இன ஒதுக்கீட்டில் இருந்ததை விட மோசமாக இருக்கும் ஏனென்றால் மக்களுக்கு குற்றம் விளைவிக்கும்  செயல் என்ன என்று தெரியாமல் இருப்பார்கள். எல்லாம் அம்னோவை பொறுத்தது,” என்று ஸைட் மேலும் கூறினார்.

ஆட்சியாளர் பற்றி குறிப்பிட்ட ஸைட், எப்போது ஓர் ஆட்சியாளர் அவமதிக்கப்படுகிறார். அதனையும் கூட எழுத்து வடிவில் போட வேண்டும் என்றார்.

“ஒரு மலாய் ஆட்சியாளர் நாட்டின் நிருவாகத்தில் செயலாக்க அதிகாரம் வேண்டும் என்று தீர்மானித்தால், அதை அம்னோ அனுமதித்தால், அதனை நமது சட்டத்தில் கூற வேண்டும். அப்போதுதான் மக்கள் அதனை எதிர்ப்பது குற்றம் என்று தெரிந்து கொள்வார்கள்.

“ஓர் ஆட்சியாளரின் விருப்பம் பற்றி கருத்து கூறுவது கூட குற்றம் என்பதைத் தடை செய்வதற்கான தெளிவான சட்டத்தை இயற்றுங்கள். சீன பேரரசர் அம்மாதிரியான தகுதியை சீன பேரரசு காலத்தில் (Middle Kingdon) கொண்டிருந்தார்.

“அப்போதுதான் நமக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது என்று நம்ப வைத்து விட்டு பின்னர் அதற்காக கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகமல் இருக்க முடியும். உண்மையில் ஒரு பகுதி-இன ஒதுக்கீடு சாரம் கொண்டவர்களான நாம் வழக்கமான ஜனநாயமாக விளங்கிறோம் என்று பாசாங்கு செய்ய முடியாது”, என்று அவர் மேலும் கூறினார்.

 

இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்பு தகுதி

 

இஸ்லாம் ஒரு “பெரிய பிரச்சனை” என்று குறிப்பிட்ட அந்த முன்னாள் சட்ட அமைச்சர், எச்செயல்கள் அச்சமயத்தை அவமதிக்கின்றன, அதற்கு சாவால் விடுகின்றன  என்று வியந்தார்.

“இப்போதைக்கு, அதிகாரத்தினர் செய்யும் எது குறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, ஏனென்றால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாக அர்த்தமாக்கப்படும். இந்தப் பிரச்சனையை அல்லது சூழ்நிலையை தெளிவாக விளக்குவதன் வழி மக்களுக்கு உதவுங்கள்.

Kassim Ahmad“எடுத்துக்காட்டாக, நண்பரும் வழக்குரைஞருமான ரோஸ்லி டாலான் இன்னொரு இஸ்லாமியர் காசிம் அஹமாட்டை ஷரியா நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கிறார் என்பதற்காக அவர் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்”, என்று ஸைட் தெரிவித்தார்.

மலாய்க்காரர்களின் சிறப்புத் தகுதி என்ற நான்காவது புனித விவகாரம் பற்றி குறிப்பிட்ட ஸைட், (தென்னாப்பிரிக்காவில்) இன ஒதுக்கீடு அமலில் இருந்த காலத்தில் வெள்ளையர்களை அவர்கள் உருவாக்கிய வேற்றுமைப்படுத்தும் கொள்கைகள் குறித்து கேள்வி கேட்பது ஒரு குற்றமாகும்.

“இது (வெள்ளையர் கொள்கை) உள்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டிருக்கிறது? இப்போதைக்கு, அவர் பேசிய மலாய்க்காரர்களின் உரிமைகள் எதனை உள்ளடக்கியது என்பது எவருக்கும் தெரியாது.

“(அரசமைப்புச் சட்ட) பிரிவு 153 “சலுகைகள்” பற்றியதாகும். ஆகவே, மலாய்க்காரர் “உரிமைகள்” என்ன என்பது எனக்கு தெரியவில்லை. நாம் SA apartheidஅதிகமான மலாய்க்காரர்களை தொழிற்பயிற்சி மற்றும் பகுதி-தொழிலியத்துவ பயிற்சிக்கும் அனுப்ப வேண்டும் என்றும் அதனால் குறைவானவர்களை பல்கலைக்கழங்களுக்கும் அனுப்ப வேண்டும் நான் கூறினால், அமைச்சர் என்னை மலாய்க்காரருக்கு எதிரானவர் என்று நினைக்கக்கூடும்.

“(முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதீர் மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் அல்லது நாணயமற்றவர்கள் என்று சமீபத்தில் கூறினார். இது ஒரு குற்றமா? (தென்னாப்பிரிக்காவில்) ஆப்ரிக்கானெர்கள் (வெள்ளையர்கள்) கறுப்பர்களுக்கு செய்தது போல் மலாய்க்காரர்களை பற்றி நாம் பேசுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் அனைத்து விவகாரங்கள் பற்றிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

தெளிவான சட்டங்கள் இல்லாத நிலையில், அம்னோ எது குற்றம் எது குற்றமில்லை என்பதை வரையறுக்கும் ஒரே அதிகார சக்தியாகி விடும்.

“அம்னோவுக்கு சினத்தை ஏற்படுத்தினால் அல்லது அது அவமதிக்கப்பட்டு விட்டதாக அது கருதினால், அது ஒரு குற்றமாகும் என்பது தெளிவாகி விட்டது. இது பெரும் நாசம் விளைவிக்கக்கூடியது என்பதோடு நியாயமற்றதாகும். நிச்சயமாக, இது (தென்னாப்பிரிக்காவில்) இன ஒதுக்கீடு காலத்தில் இருந்த சட்டங்களை விட மிக மோசமானதாகும்”, என்று ஸைட் இப்ராகிம் கூறினார்.