அம்பிகா: தேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நீதித்துறை நிறுத்தலாம்

 

Ambiga Judicary can stopதேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே அமைப்பு நீதித்துறை மட்டுமே என்று முன்னாள் வழக்குரைஞர் மன்ற தலைவர் அம்பிகா கூறினார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிற்கும் ஒரே அமைப்பு அதுதான்”, என்றாரவர்.

தற்போது தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவிருக்கும் வழக்குரைஞர் எட்மண்ட் போன் பாட்வாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல கூறிய போது அவர் தமது சட்டக் கருத்தைத்தான் அளித்தார் என்று அம்பிகா சுட்டிக் காட்டினார்.

“நான் அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் அது தவறான கருத்து என்று நினைக்கலாம், ஆனால் அது அவருடையக் கருத்து என்பதோடு அது ஒரு சட்டக் கருத்து ஆகும்”, என்று அவர் நேற்றிரவு Gerakan Hapus Akta Hasutan (GHAH) என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

த மலேசியன் இன்சைடர் வெளியிட்டிருந்த அவரது கட்டுரையில் போன் தெரிவித்திருந்த கருத்துக்காக கடந்த வாரம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.

அரசாங்க நடவடிக்கைகள் வெறுப்பு மற்றும் அவமதித்தல் ஆகியவற்றை நிகழச் செய்கின்றன என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் கூட்டுத் தலைவரும், நெகாரா-கு என்ற அரசு சார்பற்ற அமைப்பின் கூட்டு நிறுவனருமான அம்பிகா கூறினார்.

“நமக்கு அவர்கள் செய்வதுதான் அவர்கள் மீது வெறுப்பையும் அவமதிப்பையும் உண்டாக்குகிறது”, என்று அம்பிகா மேலும் கூறினார்.