ஹருன் டின்: பக்கத்தானுடனான உறவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

 

PAS-review relations with pakatanமுக்தாமார். பாஸ்சின் துணை ஆன்மீக தலைவர் ஹருன் டின் பக்கத்தானில் தற்போதைய “நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை” கவனத்தில் கொண்டு கட்சியின் தேவான் உலாமா பக்கத்தானுடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்று கூறினார்.

ஜொகூரில் பாஸ் உலாமா முக்தாரை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்ரிய ஹருன் டின் பக்கத்தானுடனான அரசியல் ஒத்துழைப்பு மறு பரிசீலனை செய்யப்பட்டாக வேண்டும் ஏனென்றால் சயுரா மன்றம், பாஸ் தலைவர் மற்றும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக நாள்தோறும் அவதூறு கூறப்படுகிறது என்றாரவர்.

உலாமாவின் ஆலோசனை அடிப்படையில் (ஒத்துழைப்பு) உருவாக்கப்பட்டது. அதற்கான பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன. இவை எல்லாம் பின்பற்றப்பட்டால், உலாமா இஸ்லாத்திற்காகவும் கட்சி உறுப்பினர்களுக்காகவும், தனிப்பட்ட ஒருவரின் முக்கியத்துவத்திற்காக அல்ல, ஒத்துழைப்பை தற்காக்கும்”, என்றார் ஹருன்.

“நிபந்தனைகள் மீறப்பட்டால், கோட்பாடுகள் நசுக்கப்பட்டால், இதனைத் தொடரலாமா என்று உலாமா மீண்டும் ஆலோசிப்பது நியாயமாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

தங்களுடைய சக்தி பலவீனமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பாஸ் தலைவர் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.